
வெள்ளிக்கிழமை அன்று உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் லாலி ரோடு கிளை மகளிர் அணியும், நாட்டுப்பற்றாளன் தன்னார்வ நுகர்வோர் அமைப்பும் இணைந்து பேரூர் போஸ்டல் காலனியில் உள்ள அன்பு இல்லம் ஆதரவற்ற முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இல்லத்திற்குச் சென்று அங்குள்ள 64 நபர்களுக்கு உணவும், உடையும் வழங்கினார்கள்.
நாட்டுப்பற்றாளன் அமைப்பின் நிறுவனர் திரு. செல்வம் அவர்கள் தலைமையில், லாலி ரோடு கிளை மகளிர் அணியின் தலைவி திருமதி லலிதாம்பிகை ராஜசேகர் அவர்கள் தொடங்கி வைத்து மகிழ்வுரை ஆற்றினார்.
லாலி ரோடு கிளை துணைத்தலைவர் திருமதி பிரபா சிவகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.

பின்பு காப்பகத்தில் உள்ள அனைவருக்கும் உணவு மற்றும் உடைகளை மகளிர் அனைவரும் வழங்கினார்கள்.
அருகில் இருந்த மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். நாட்டுப்பற்றாளன் நிறுவனர் திரு செல்வம் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.
இதில் ஆதரவற்றோருக்கு நாம் காட்டும் ஆதரவின் அவசியம் பற்றி பேசினார்.
.gif)
லாலி ரோடு கிளை செயலாளர் திருமதி கீதா ஜெகதீஷன் மற்றும் பொருளாளர் திருமதி சுப்பம்மாள் ரமேஷ்குமார் இருவரும் வாழ்த்துரை வழங்கினர்.பிறகு அனைவரும் இணைந்து வந்திருந்த அனைவருக்கும் ஆடைகள் மற்றும் இனிப்பு வழங்கினார்கள் . நிறைவாக லாலி ரோடு மகளிரணி கிளையின் துணைத்தலைவர் திருமதி ஜாக்குலின் மேரி நாகராஜ் நன்றியுரை கூற நிகழ்ச்சி இனிதாக நடந்து முடிந்தது.





0 Comments