Ticker

6/recent/ticker-posts

கோவையில் நாம் மனிதர் கழகம் பேரவையின் கலந்தாய்வுக் கூட்டம்.


நாம் மனிதர் கழகம் சமூக சேவை அமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் கோயம்புத்தூரில் 22/10/2022 ஆம் நாள் இனிதாக நடைபெற்றது. 

அமைப்பின் தலைவர் டாக்டர் பாபுஜி காந்தி, செயலாளர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வீரப்பன், ஆலோசகர் கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், கோயம்புத்தூர் மூத்த வழக்கறிஞர் ஜீவானந்தம், முன்னாள் காந்திகிராம பல்கலைக்கழக துணைவேந்தர் மார்க்கண்டன் ஐயா, கோயம்புத்தூர் பகுதியில் திருக்குறள் பணியாற்றும் குறள் யோகி முனைவர் மு.க. அன்வர் பாட்ஷா மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாயிகள் பிரிவு செயலாளர் சோழராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். 
கூட்டத்தில் கிராமம் தோறும் சமூகப் பணியாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்வது குறித்து கலந்தாலோசிக்கப் பட்டது.கூட்டத்தில் பங்கேற்ற சான்றோர் பெருமக்களுக்குத் திருக்குறள் அன்வர் பாட்சா தன்னுடைய நூல்கள் பரிசளித்தார். நிகழ்ச்சி சிறப்புடன் நிறைவு பெற்றது. 

தகவல்;திருக்குறள் முனைவர் மு.க. அன்வர் பாட்சா 

Post a Comment

0 Comments