நாடளாவிய ரீதியில் கைது செய்யும் நடவடிக்கையில் இராணுவத்தினர்

நாடளாவிய ரீதியில் கைது செய்யும் நடவடிக்கையில் இராணுவத்தினர்

நாடளாவிய ரீதியில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுக்கவும், அதில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே வழங்கிய பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவல்களுக்கமைய, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் சுமார் ஆறு மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் ஒரு வாரத்திற்குள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதற்கமைய, கஞ்சா, ஹெரோயின், ஐஸ், கஞ்சா, சிகரெட், கசிப்பு, கோடா உள்ளிட்ட பல போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில், கிட்டத்தட்ட ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சாவும் காணப்பட்டுள்ளது.

போதைப்பொருட்களுடன் 31 சந்தேக நபர்களை கைது செய்த இராணுவத்தினர், பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.  

 மேலும்..... தமிழ்நாடு செய்திகள் படிக்கவும் 

மேலும்..... இலங்கை  செய்திகள் படிக்கவும் 

மேலும்..... இந்தியா  செய்திகள் படிக்கவும் 

மேலும்..... உலக  செய்திகள் படிக்கவும் 

மேலும்..... விளையாட்டு செய்திகள் படிக்கவும் 


 


Post a Comment

Previous Post Next Post