எனது வயது 17. எனக்கு அதிகமாக தூக்கம் வருவதால் படிப்பது சிரமமாக உள்ளது. இதற்காக நான் தூங்காமல் விழித்திருப்பதற்கான மாத்திரை சாப்பிடலாமா? இல்லையென்றால் வேறு வழிகள் உண்டா?
பாத்திமா சஜானா, சாய்ந்தமருது
தூக்கத்தின் போது உடல் ஓய்வெடுப்பது மாத்திரமன்றி உள்ளமும் சாந்தமடைகின்றது. எவ்வகையான பிரச்சினைகள் இருந்தாலும் தூங்கி எழும்போது புதுப் பொலிவுடனேயே எழும்புகிறான். உடல் உறுப்புக்கள் இழந்த சக்தியை மீளப்பெற்று அடுத்த நாளுக்குரிய வேலைகளைச் சுறுசுறுப்பாகச் செய்வதற்கு உதவுவது இத்தூக்க மேயாகும். ஆனால் இத்தகைய மகிமை பொருந்திய தூக்கத்திற்கு ஒரு எல்லை உள்ளது. ஒருவருக்குச் சராசரியாக 6-8 மணித்தியாலங்கள் தூங்கினால் போதுமாகும். ஆனால் ஒருவருக்கு அளவுக்கு அதிகமாக அல்லது குறைவாகத் தூக்கம் இருந்தால் அது எமது உடல் நலத்திற்கு உகந்தது அல்ல.
அதிக தூக்கம் எமது கல்வி, தொழில் போன்றவற்றில் பின்னடைவை ஏற்படுத்தி எமது முழு வாழ்க்கையையுமே அதிக துக்கத்தில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும். அதிக தூக்கம் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. மன நலப்பிரச்சனைகள், சில ஹோர்மோன்களின் குறைபாடுகள் , உடம்புக்குத் தேவையான சத்துப் பொருட்களின் குறைபாடு, மருந்துகளின் பக்கவிளைவுகள் போன்ற பல காரணங்கள் உள்ளன. அத்துடன் கல்வி கற்று வாழ்கையில் முன்னேற வேண்டும் என்ற இலக்கு இல்லாத மாணவர்களுக்குப் புத்தகமே தூக்கமாத்திரையாக மாறிவிடுகிறது. அவர்களுக்குப் புத்தகத்தைக் கையில் எடுத்தாலே தூக்கம் வந்து விடும். அத்துடன் அதிக தூக்கத்தை களைப்பு, உற்சாகமின்மை, சோம்பேறித்தனம் போன்ற நிலைகளிலிருந்து வேறுபடுத்துவதும் முக்கிய மாகும்.
இங்கு கேள்வி கேட்டிருக்கும் மாணவி தனக்கு அதிக தூக்கம் வருவதால் படிப்பது சிரமமாக இருப்பதாகவும் இதற்காக மாத்திரைகளை சாப்பிடலாமா எனவும் வினவியுள்ளார்.
நான் மேற்குறிப்பிட்டது போல் அதிக தூக்கத்திற்கான காரணத்தைக் கண்டறிவது மிகமுக்கியமாகும்.
நவீன மருத்துவத்தில் சில மாத்திரைகள் இருந்தாலும் அதிக பக்க விளைவுகள் காரணமாக வைத்தியர்கள் இம் மருந்துகளைச் சிபாரிசு செய்வது இல்லை . ஆனால் யுனானி மருத்து வத்தில் பக்கவிளைவுகளற்ற சிகிச்சை முறைகள் உள்ளன.
இறுதியாக வாசகர்களுக்கு ஒரு செய்தியாக, விசேடமாகப் பெற்றோர்களுக்கு, அதிக தூக்கத்திற்குப் பல காரணங்கள் உள்ளன. எனவே உங்களது பிள்ளைகளுக்கும் இந்நிலை இருந்தால் தகுந்த வைத்தியர் ஒருவரிடம் கலந்தா லோசிக்கவும்.
DR.NASEEM
வாசகர்கள் தங்கள் ஆக்கங்களை
வேட்டை Email மூலம் அனுப்புங்கள்
Email-vettai007@yahoo.com
Tags:
ஆரோக்கியம்