"BUT அந்த டீல் எனக்கு பிடிச்சுருக்கு.." - தம்பதிக்கு இலவச பீட்சாவை அறிவித்த PIZZA HUT.. எதற்காக தெரியுமா?

"BUT அந்த டீல் எனக்கு பிடிச்சுருக்கு.." - தம்பதிக்கு இலவச பீட்சாவை அறிவித்த PIZZA HUT.. எதற்காக தெரியுமா?

மாதம் ஒருமுறை பீட்சா வேண்டும் என்று திருமணம் செய்துகொள்ளும் மணப்பெண் ஒருவர் போட்டுள்ள ஒப்பந்தத்திற்கு பீட்சா ஹட் நிறுவனம் மாதம் ஒரு முறை வீதம் ஒரு ஆண்டுக்கு இலவசமாக பீட்சா அளிப்பதாக தெரிவித்துள்ளது 

தற்போதைய சூழலில் 90ஸ் கிட்ஸ்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. பார்த்திபன்-வடிவேலு படத்தில் வரும் 'இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்' என்ற காமெடியை போல முதலில் நல்ல பெண் கிடைக்கவேண்டும் என்பதில் ஆரம்பித்து இறுதியில் பெண் கிடைத்தால் போதும் என்று 90ஸ் கிட்ஸ் நிலைமை இருந்து வருகிறது. 

இந்த நிலையில் அதை மெய்ப்பிக்கும் விதமாக திருமணம் ஒன்று அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. அதில் பெண் போட்ட பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அந்த பெண்ணை ஒருவர் திருமணம் செய்துகொண்டுள்ளார். 

 அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மின்டு என்பவருக்கும் சாந்தி என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமண சடங்குகள் முடிந்த நிலையில், மணமகனும், மணமகளும் ஒரு பெரிய அலங்கரிக்கப்பட்ட தாளில் எழுதப்பட்டிருந்த தாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோவை தம்பதிகள் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். 

இந்த ஒப்பந்தம் திருமணம் நடைபெறுவதற்கு முன்பே இருவரும் ஒப்புக்கொண்ட ஒப்பந்தங்கள் என்றும், திருமணத்துக்கு பின்னர் இதை பின்பற்றவேண்டும் என்பதற்காக இது போன்ற ஒப்பந்தத்தை முன்னரே செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ஞாயிறு காலை உணவை கணவர் செய்ய வேண்டும், வீட்டு உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், நேரத்துக்கு வீட்டுக்கு வர வேண்டும், பார்ட்டிகளில் நல்ல புகைப்படம் எடுக்க வேண்டும், 15 நாட்களுக்கு ஒருமுறை ஷாப்பிங் செல்லவேண்டும், தினமும் ஜிம் செல்லவேண்டும், போன்ற ஒப்பந்தங்கள் இருந்தது. 
ஆண் தரப்பில், மனைவி தினமும் சேலைதான் கட்ட வேண்டும், கணவருடன் மட்டுமே இரவு பார்ட்டிகளுக்கு செல்ல வேண்டும், மாதத்தில் ஒரு பீட்சாவுக்கு மட்டுமே அனுமதி போன்ற சில ஒப்பந்தங்களும் அதில் இருந்துள்ளது.


இந்த நிலையில் திருமணத்தின்போது மாதாமாதம் பீட்சா வாங்கி தர வேண்டும் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக தம்பதிக்கு பீட்சா ஹட் உணவகம் மாதம் ஒரு முறை வீதம் ஒரு ஆண்டுக்கு இலவசமாக பீட்சா அளிப்பதாக பீட்சா ஹட் உறுதியளித்துள்ளது. இதனை தம்பதி தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
SOURCE;kalaignarseithigal
 


காவல்துறையினரால் சுட்டு கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்கள்



முல்லேரியா மற்றும் அஹுங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் காரணமல்லாமல் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றச்சாட்டில் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் குறித்த இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

எனினும் துப்பாக்கிசூட்டில் கொல்லப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல என காவல்துறை விசாரணைக் குழுக்கள் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் இவ்வாறான தவறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.









திலினியால் சிக்கப்போகும் பெரும் தலைகள் 

மோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ள திலினி பிரியமாலியுடன் நெருக்கமாக இருந்த பொலிஸார், பிரபல அரசியல்வாதிகள் மற்றும் பிரபல நடிகைகளின் பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் தெரியாத பல கோடீஸ்வரர்களை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரியமாலிக்கு நெருக்கமாக இருந்த பொலிஸார், அமைச்சர்கள் மற்றும் பிரபலங்கள் பல கோடி ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வர்த்தகர்கள், அரசியல்வாதிகள், கலைஞர்கள், பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுடன் திலினி பிரியமாலி எவ்வாறு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்த உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர், குற்ற விசாரணை பிரிவினரால், கற்பனை கூட செய்து பார்க்க முடியாத விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

திலினியின் கையடக்க தொலைபேசி மற்றும் பிற கணினி சாதனங்களை ஆய்வு செய்ததில் இது குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரபலங்களிடம் உதவி தேவைப்படும்போது அவர்களை மிரட்டி தனக்குத் தேவையானதைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே பிரியமாலி பிரபலங்கள் பேசும் உரையாடல்களை பதிவு செய்துவைத்திருந்ததாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

Previous Post Next Post