கோபி மஞ்சூரியன் சாப்பிடுவதில் ஏற்பட்ட தகராறில் பாட்டியை கொன்று விட்டு தலைமறைவான பேரனும், தாயும் 6 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களுருவில் வசித்து வந்தவர் 70 வயது மூதாட்டி சாந்தகுமாரி. இவர் அங்கு தனது மகள் சசிலேகா மற்றும் பேரன் சஞ்சயுடன் தனியே வசித்துவந்துள்ளார். மூதாட்டி சாந்தகுமாரிக்கு சாஸ்திரம் சம்பிரதாயம் மீது அதீத நம்பிக்கை உள்ளதால், தனது மகள் மற்றும் பேரனும் அதே போல் இருக்க வேண்டும் என்று எண்ணியுள்ளார்.
இருப்பினும் அவர்கள் அப்படி இல்லாத காரணத்தினால் மூதாட்டிக்கும் குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த தகராறு சாப்பாடு விஷயத்திலும் நடந்துள்ளது. சுத்தமாக இருக்க வேண்டும், சாப்பிட வேண்டும் என்று பல கெடுபிடி விதித்து வந்துள்ளார். இதனால் பேரனுக்கும் பாட்டிக்கும் இடையே கூட அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு (10 ஆண்டுகளுக்கு முன்பு) ஆகஸ்ட் மாதம் பேரன் சஞ்சய் கோபி மஞ்சூரியன் வாங்கிவந்து சாப்பிட்டுள்ளார். அப்போது மூதாட்டி பேரனை வசைபாடியுள்ளார். இதனால் கோபமடைந்த பேரன் மூதாட்டியை சரமாரியாக அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள பாட்டியை கண்டதும் பதறிப்போன பேரன், உடனே தனது தாயிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து வெளியே சொன்னால் நமக்கு பிரச்னை வந்துவிடும் என்ற பயத்தில் மூதாட்டியின் உடலை கரி மற்றும் சிமென்ட்டால் வீட்டிலுள்ள ஓர் அலமாரியில் புதைத்ததுள்ளனர். இந்த சம்பவம் நடக்கும்போது உடன் சஞ்சயின் நண்பரான நந்தேஷ் என்பவரும் உதவிபுரிந்துள்ளார்.
பின்னர் சம்பவம் நடந்த சில மாதங்களிலே அவர்களது வீட்டை காலி செய்து தாய் சைஸிலேகா மற்றும் மகன் சஞ்சய் வேறு பகுதிக்கு சென்றுள்ளனர். இதையடுத்து அந்த வீட்டை புனரமைப்பு செய்ய வீட்டின் முதலாளி வேலை செய்த போது தான் அழுகிய நிலையில் பாட்டியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
பின்னர் இதுகுறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் வந்தவர்கள், மூதாட்டியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். அப்போது சஞ்சயின் நண்பரான நந்தேஷை காவல்துறையினர் விசாரித்ததில், குற்றச் சம்பவத்தை கூறியுள்ளார். இதையடுத்து தொடர்ந்து மூதாட்டியின் மகள் மற்றும் பேரனை காவல்துறை தேடி வந்த நிலையில், அவர்கள் மகாராஷ்டிராவில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில் அங்கு சென்ற அதிகாரிகள் மகாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாபூர் பகுதியில் தலைமறைவாக இருந்த பேரன் சஞ்சய் மற்றும் மகள் சசிலேகாவை கைது செய்து விசாரித்தனர். அப்போது தங்களது குற்றங்களை இருவரும் ஒப்புக்கொண்டனர். மேலும் படிப்பில் 90% மதிப்பெண் வாங்ககி வந்த பேரன் சஞ்சய் ஒரு ஏரோனாட்டிகல் இன்ஜினியரிங் மாணவராக இருந்துள்ளார்.
ஆனால் பாட்டியை கொலை செய்து தலைமறைவான பின்பு தனது படிப்பை விட்டுவிட்டு ஒரு ஹோட்டலில் ஊழியராகவும், அவரது தாய் சசிலேகா வீட்டு பணிப்பெண்ணாகவும் இருந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபி மஞ்சூரியன் சாப்பிடுவதில் ஏற்பட்ட தகராறில் பாட்டியை கொன்று விட்டு பேரனும், தாயும் தலைவராக இருந்து வந்த நிலையில், சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SOURCE;kalaignarseithigal
0 Comments