Ticker

6/recent/ticker-posts

அழிவை நோக்கி ஜப்பான்... உடனே இதில் கவனம் செலுத்துங்கள்! - அலெர்ட் செய்த பிரதமர் ஆலோசகர்!

ஜப்பான் விரைவில் உலகத்தில் இருந்து காணாமல் போகும் என ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் குழந்தை பிறப்பு விகிதம், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக சரிந்து வருகிறது. கடந்த ஆண்டு, 15 லட்சத்து 80 ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில், குழந்தை பிறப்பு 8 லட்சமாக உள்ளது. ஜப்பானில் பிறந்ததை விட இரண்டு மடங்கு அதிகமான மக்கள் இறந்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க குடும்பங்களுக்கு இரட்டிப்புச் செலவு செய்வதாக பிரதமர் கிஷிடா அறிவித்தார். இந்த நிலையில் இதே நிலை தொடர்ந்தால் ஜப்பான் எனும் ஒரு நாடு, உலகத்தில் காணாமல் போகும் என ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் ஆலோசகர் மசாகோ மோரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டோக்கியோவில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘‘சமூக பாதுகாப்பு வலையையும் பொருளாதாரத்தையும் அழிக்க அச்சுறுத்தும் ஜப்பானின் பிறப்பு விகிதத்தில் வீழ்ச்சியைக் குறைக்க முடியாவிட்டால் ஜப்பான் ஒரு நாள் காணாமல் போகும். கடந்த ஆண்டு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ளது.
எதுவும் செய்யாவிட்டால், சமூக பாதுகாப்பு அமைப்பு வீழ்ச்சியடையும், தொழில்துறை மற்றும் பொருளாதார வலிமை குறையும் மற்றும் நாட்டைப் பாதுகாக்க தற்காப்புப் படைகளுக்கு போதுமான ஆட்கள் இல்லை.

குழந்தை பிறக்கும் வயதுடைய பெண்களின் எண்ணிக்கை குறைவதால் இப்போது சரிவை மாற்றுவது மிகவும் கடினம் என்றாலும், வீழ்ச்சியை மெதுவாக்குவதற்கும் சேதத்தைத் தணிக்க உதவுவதற்கும் அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
news18




 



Post a Comment

0 Comments