ஐபிஎல் 2023: ஐபிஎல் அணிகள் விடுவித்த, தக்கவைத்த வீரர்கள்.. கையிருப்பு தொகை விவரம்

ஐபிஎல் 2023: ஐபிஎல் அணிகள் விடுவித்த, தக்கவைத்த வீரர்கள்.. கையிருப்பு தொகை விவரம்


ஐபிஎல் 16வது சீசனுக்கு முன்பாக ஐபிஎல் அணிகள் விடுவித்த மற்றும் தக்கவைத்த வீரர்கள், கையிருப்பு தொகை விவரங்களை பார்ப்போம்.

ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதி கொச்சியில் நடக்கிறது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், கேகேஆர் அணிகள் விடுவித்த வீரர்கள் யார் யார் என்று ஏற்கனவே பார்த்தோம்.

மற்ற 7 அணிகளும் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்கள் பட்டியலை பார்ப்போம்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

விடுவித்த வீரர்கள் - கேன் வில்லியம்சன், நிகோலஸ் பூரன், ஜெகதீஷா சுஜித், பிரியம் கர்க், ரவிகுமார் சமர்த், ரொமாரியோ ஷெஃபெர்டு, சௌரப் துபே, சீன் அபாட், ஷஷான்க் சிங், ஷ்ரேயாஸ் கோபால், சுஷாந்த் மிஷ்ரா, விஷ்ணு வினோத்.

தக்கவைத்த வீரர்கள் - அப்துல் சமாத், எய்டன் மார்க்ரம், ராகுல் திரிபாதி, க்ளென் ஃபிலிப்ஸ், அபிஷேக் ஷர்மா, மார்கோ யான்சென், வாஷிங்டன் சுந்தர், ஃபஸல்ஹக் ஃபரூக்கி, கார்த்திக் தியாகி, புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், உம்ரான் மாலிக்.

கையிருப்பு தொகை - ரூ.42.25 கோடி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

விடுவித்த வீரர்கள் - ஜேசன் பெஹ்ரண்டார்ஃப் (மும்பைக்கு வழங்கப்பட்ட வீரர்), அனீஷ்வர் கௌதம், சாமா மிலிந்த், லவ்னித் சிசோடியா, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு

தக்கவைத்த வீரர்கள் - ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, சுயாஷ் பிரபுதேசாய், ரஜாத் பட்டிதர், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், ஃபின் ஆலன், க்ளென் மேக்ஸ்வெல், வனிந்து ஹசரங்கா, ஷபாஸ் அகமது, ஹர்ஷல் படேல், டேவிட் வில்லி, கரன் ஷர்மா, மஹிபால் லோம்ரார், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட், சித்தார்த் கௌல், ஆகாஷ் தீப்.

கையிருப்பு தொகை - ரூ.8.75 கோடி

டெல்லி கேபிடள்ஸ் அணி:

விடுவித்த வீரர்கள் - ஷர்துல் தாகூர் (கேகேஆருக்கு வழங்கப்பட்ட வீரர்), டிம் சேஃபெர்ட், அஷ்வின் ஹெப்பார், ஸ்ரீகர் பரத், மந்தீப் சிங்

அமான் கான் - கேகேஆரிடமிருந்து வாங்கப்பட்ட வீரர்

தக்கவைத்த வீரர்கள் - ரிஷப் பண்ட் (கேப்டன்), டேவிட் வார்னர், பிரித்வி ஷா, ரிப்பால் படேல், ரோவ்மன் பவல், சர்ஃபராஸ் கான், யஷ் துல், மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், அக்ஸர் படேல், அன்ரிக் நோர்க்யா, சேத்தன் சக்காரியா, கமலேஷ்  நாகர்கோட்டி, கலீல் அகமது, லுங்கி இங்கிடி, முஸ்தாஃபிசுர் ரஹ்மான், குல்தீப் யாதவ், பிரவீன் துபே, விக்கி ஆஸ்ட்வால்.

கையிருப்பு தொகை - ரூ.19.45 கோடி

பஞ்சாப் கிங்ஸ் அணி:

விடுவித்த வீரர்கள் - மயன்க் அகர்வால், ஒடீன் ஸ்மித், வைபவ் அரோரா,  பென்னி ஹோவல், இஷான் போரெல், அன்ஷ் படேல், பிரெரக் மன்கட், சந்தீப் ஷர்மா, வ்ரித்திக் சட்டர்ஜீ

தக்கவைத்த வீரர்கள் - ஷிகர் தவான் (கேப்டன்), ஷாருக்கான், ஜானி பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சா, ஜித்தேஷ் ஷர்மா, ராஜ் பவா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைட், அர்ஷ்தீப் சிங், பல்தேஜ் சிங், நேதன் எல்லிஸ், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், ஹர்ப்ரீத் ப்ரார்.

கையிருப்பு தொகை - ரூ.32.2 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

விடுவித்த வீரர்கள் - அனுனாய் சிங், கார்பின் போஷ், டேரைல் மிட்செல், ஜிம்மி நீஷம், கருண் நாயர், நேதன் குல்ட்டர்நைல், ராசி வாண்டர்டசன், ஷுபம் கார்வால், தேஜாஸ் பரோகா.

தக்கவைத்த வீரர்கள் - சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிம்ரான் ஹெட்மயர், தேவ்தத் படிக்கல், ஜோஸ் பட்லர், த்ருவ் ஜுரெல், ரியான் பராக், பிரசித் கிருஷ்ணா, டிரெண்ட் போல்ட், ஒபெட் மெக்காய், நவ்தீப் சைனி, குல்தீப் சென், குல்திப் யாதவ், ரவிச்சந்திரன் அஷ்வின் யுஸ்வேந்திர சாஹல், கேசி காரியப்பா.

கையிருப்பு தொகை - ரூ.13.2 கோடி

குஜராத் டைட்டன்ஸ் அணி:

விடுவித்த வீரர்கள் - ரஹ்மானுல்லா குர்பாஸ், லாக்கி ஃபெர்குசன், டோமினிக் டிரேக்ஸ், குர்கீரத் சிங், ஜேசன் ராய், வருண் ஆரோன்

தக்கவைத்த வீரர்கள் - ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷுப்மன் கில், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், சாய் சுதர்சன், ரிதிமான் சஹா, மேத்யூ வேட், ரஷீத் கான், ராகுல் டெவாட்டியா, விஜய் சங்கர், முகமது ஷமி, அல்ஸாரி ஜோசஃப், யஷ் தயால், பிரதீப் சங்வான், தர்ஷன் நால்கண்டே, ஜெயந்த் யாதவ், சாய் கிஷோர், நூர் அகமது.

கையிருப்பு தொகை - ரூ.19.25 கோடி

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

விடுவித்த வீரர்கள் - ஆண்ட்ரூ டை, அங்கித் ராஜ்பூத், துஷ்மந்தா சமீரா, எவின் லூயிஸ், ஜேசன் ஹோல்டர், மனீஷ் பாண்டே, ஷபாஸ் நதீம்

தக்கவைத்த வீரர்கள் - கேஎல் ராகுல் (கேப்டன்), ஆயுஷ் பதானி, கரண் ஷர்மா, மனன் வோரா, குயிண்டன் டி காக், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிருஷ்ணப்பா கௌதம், தீபக் ஹூடா, கைல் மேயர்ஸ், க்ருணல் பாண்டியா, ஆவேஷ் கான், மோசின் கான், மார்க் உட், மயன்க் யாதவ், ரவி பிஷ்னோய்.

கையிருப்பு தொகை - ரூ.23.35 கோடி
asianetnews


 


Post a Comment

Previous Post Next Post