அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்கள் தனது சேவைக்காலத்தில் மேற்கொண்டுள்ள கடின உழைப்பு..

அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்கள் தனது சேவைக்காலத்தில் மேற்கொண்டுள்ள கடின உழைப்பு..


கடந்தவாரம் யாழ்ப்பாணம் சென்றிருந்த நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச அவர்களை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தினை மேற்கொண்ட குழுவினருக்கு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்கள் தனது சேவைக்காலத்தில் மேற்கொண்டுள்ள கடின உழைப்பு தொடர்பில் தெரியாமல் இருக்கலாம். 

எனவே ஒரு அமைச்சராக தனது அறிவை ஆற்றலைக் கொண்டு அவர் மக்களுக்கு என்ன செய்திருக்கின்றார் என்பதை நினைவூட்டுவது பொருத்தமானதாகும். 

அரசியல் யாப்பின் 19 திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி ஜனநாயகத்தையும் சட்டம்-ஒழுங்கையும் மேம்படுத்த அயராது உழைத்திருக்கின்றார்.

தகவல் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றி, அந்த உரிமையை மக்களின் அடிப்படை உரிமையாக அரசியல் யாப்பில் இணைத்துக்கொள்ள அயராது உழைத்திருக்கின்றார். 

பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளை பாதுகாக்கும் சட்ட மூலத்தை நிறைவேற்ற அயராது உழைத்திருக்கின்றார்.

ஆட்சியுரிமைச் சட்டத்தில் காணப்படும் 10 வருடங்களுக்கு காணியொன்றை ஆட்சி செய்தால் உடமை கொள்ளக்கூடிய உரிமை தொடர்பில் யுத்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட விடுப்பு அளிக்கப்படும் சட்டமூலத்தில் திருத்தத்தை கொண்டுவந்து விடுப்பு காலத்தை 2015ம் ஆண்டுவரை நீடிக்க அமைச்சர் விஜயதாச ராஜபக்சவால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

வடகிழக்கு மக்களின் காணிப் பிணக்குகளைத் தீர்ப்பதற்காக விசேட இணக்க சபை சட்டமூலத்தை நிறைவேற்ற உழைத்திருக்கின்றார். 

இவ்விணக்க சபைகள் வெற்றிகரமாக செயற்பட்டமையால் அத்திட்டம் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகம் உத்தியோக பூர்வமாக நிறுவப்பட்டிருந்தபோதும், கடந்த நான்கு வருடங்களில் விசாரணை செய்யப்படவேண்டியிருந்த 7500 கோப்புகளில் 65 கோப்புக்களே விசாரணை செய்து முடிக்கப்பட்டிருந்த நிலையில், விஜயதாஸ ராஜபக்ச அமைச்சராக கடமையேற்ற கடந்த நான்கு மாதங்களில் 2000 கோப்புக்கள் முற்றாக விசாரணை செய்து முடிக்கப்பட்டிருக்கின்றது. 


வடக்கின் பல்வேறு பிரதேசங்களில் நவீன நீதிமன்ற வளாகங்கள் அமைக்க அமைச்சர் அயராது உழைத்திருக்கின்றார். 

அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச கல்வியமைச்சராக செயற்பட்ட காலத்தில் வவுனியா வளாகத்தினை பல்கலைக்கழக தரத்திற்கு தரமுயர்த்த ஆவன செய்துள்ளார்.

ஆறுக்கு மேற்பட்ட கலாச்சார நிலையங்கள் வடகிழக்கு பிரதேசத்தில் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. 

இலங்கையில் காணப்படும் மிக முக்கியமான சட்டப்புத்தகங்கள் முதற்தடவையாக அமைச்சர் பதவியிலிருந்தபோது தமிழில் வெளியாகியுள்ளது. 

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட பெரும் எண்ணிக்கையான சந்தேக நபர்களை விடுதலை செய்வதற்கு ஆவன செய்ததுடன், அவர்கள் சம்பந்தமான வழக்குகளை துரிதமாக விசாரணை செய்து நிறைவு செய்யும்பொருட்டு கொழும்பில் இரு விசேட உயர் நீதிமன்றங்களும் அனுராதபுரத்தில் ஒரு விசேட உயர் நிதிமன்றும் அமைக்க அயராது உழைத்துள்ளார். 

வடகிழக்கில் கடமை புரிகின்ற பொலிஸார் தமிழ் மொழியில் கடமை புரிவதற்கு ஏதுவாக அவர்களுக்கு தமிழ் மொழியை கற்பிக்க பல்வேறு வேலைத்திட்டங்களை அறிமுகம் செய்திருக்கின்றார். 

வடக்கு மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தனது அமைச்சின் செயலாளர் தலைமையில் பணிக்குழு ஒன்றை நிறுவியிருக்கின்றார். 

வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் பயங்கரமான போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு வட மாகாண ஆழுநர் தலைமையில் பணிக்குழு ஒன்றை கடந்த 31.10.2022 ம் திகதி நிறுவியிருக்கின்றார். 

நாட்டில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலைமை காரணமாக இந்தியாவுக்கு அகதிகளாக சென்று நாட்டிருக்கு திருப்பியிருக்கின்ற 11792 மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். அவர்கள் தங்கள் அடையாள அட்டைகள், பிறபத்தாட்சிப் பத்திரங்கள், காணி உறுதிப்பத்திரங்கள் என சகல ஆவணங்களையும் தொலைத்துள்ளனர். அம்மக்கள் அவற்றை பெற்றுக்கொள்வதற்கு அலுவலகங்களுக்கு சென்று அலைந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அமைச்சரின் ஏற்பாட்டில் இரண்டு நடமாடும் சேவைகள் நடாத்தப்பட்டு, குறித்த மக்களின் 80 வீதமான பிணக்குகள் தீர்க்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. 

அத்துடன் இந்தியாவில் கல்வி கற்று இலங்கை திரும்பியுள்ளவர்களின் கல்விச் சான்றிதழ்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்படாத நிலையில் காணப்பட்டதுடன், அச்சான்றிதழ்களை அங்கீகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இவ்வாறான செயற்பாடுகள் விஜயதாஸ ராஜபக்ச அவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதுடன், சட்ட விவகாரங்கள் தொடர்பாக தெளிவான விளக்கம் கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் விக்னேஷ்வரன் போன்றோர், அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவின் செயற்பாட்டில் பூரண திருப்தி அடைந்துள்ளதாகவும், அவர் யாழ்பாணம் சென்றிருந்தபோது அவர்கள் தங்களது புரண ஆதரவை வழங்கியதாக அவர் பாராளுமன்றில் தெரிவித்ததை அவதானிக்க கூடியதாகவிருந்தது.
Whatsapp News



 


Post a Comment

Previous Post Next Post