Ticker

6/recent/ticker-posts

Ad Code



தென்னாப்பிரிக்காவை பாகிஸ்தான் 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.


சிட்னி: தென்னாப்பிரிக்காவுடனான டி20 உலகக் கோப்பை சூப்பர் சுற்றின் 12வது ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்று அரையிறுதிக்கு செல்லும் நம்பிக்கையை பெற்றுள்ளது.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் 30,000 க்கும் அதிகமான பார்வையாளர்களின் முன்னிலையில்  பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. 43-4 என்ற நிலையில் தடுமாறிக்கொண்டிருந்த,பாகிஸ்தான் அணியை  இப்திகார் அகமது மற்றும் ஷதாப் கான் ஆகியோரின் அற்புதமான அரை சதங்கள் மீட்டெடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஒன்பது விக்கெட்டுக்கு 185 ரன்களை எடுத்தது பாகிஸ்தான்.

186 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா விளையாடியது .ஆனால் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களின் அபாரமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆபிரிக்கா அணியின் விக்கட்டுகள் சரிந்தன.

ஷாஹீன் அப்ரிடி (3-14) இரண்டு ஆரம்ப விக்கெட்டுகளை கைப்பற்றினார் மற்றும் ஷதாப் டெம்பா பவுமா மற்றும் ஐடன் மார்க்ரம் ஆகியோரை வெளியேற்றினார், 

ஒன்பது ஓவர்களுக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா 69-4 என்ற நிலையில் இருக்கும்போது மழையின் காரணமாக 1 மணித்தியாலம் போட்டி தடைபட்டது.

மீண்டும் டக்வொர்த்-லூயிஸ்-ஸ்டெர்ன் முறையின் கீழ் ஓவர்கள் குறைக்கப்பட்டு தெ.ஆப்பிரிக்கா அணி  
( 14overs) 142 எடுத்தால் வெற்றி என்ற  இலக்குடன் மீண்டும் தொடங்கியது.

எனினும் பாகிஸ்தானின் அபாரமான பந்துவீசினால் தொடர்ந்தும் விக்கெட் சரியத் தொடங்கியது. தென் ஆப்பிரிக்கா 108 ஓட்டங்களைப் பெற்று தோல்வியுற்றது.

33 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றி பெற்றது 

Pakistan-185/9
South Africa-(14/14 ov, T:142) 108/9
Pakistan won by 33 runs (D/L method)



 


Post a Comment

0 Comments