"ஈரான் 43 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலை அடைந்துவிட்டது"-அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்

"ஈரான் 43 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலை அடைந்துவிட்டது"-அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்

ஈரானில் நடந்து வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

அதே சமயம் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) அண்மையில் ஜனநாயகக் கட்சி தொடர்பான பேரணி ஒன்றில் பங்கேற்று பேசிய போது, "நாம் ஈரானை நிச்சயம் விடுவிப்போம்.

தற்போது ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்கள், விரைவில் அவர்களே அவர்களை விடுவித்துக் கொள்வார்கள்" என்று தெரிவித்தார்.

ஜோ பைடனின் இந்தக் கருத்துக்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சி (Ebrahim Raisi) பேசிய போது, "ஈரான் 43 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலை அடைந்துவிட்டது.

1979-ம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு ஈரான் தன்னை விடுவித்துக் கொண்டது என்பதை அமெரிக்க ஜனாதிபதிக்குக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்" என்று பதிலளித்துள்ளார்.


 


Post a Comment

Previous Post Next Post