கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு விலகினார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு விலகினார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் உடனடியாக மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு விலகினார்.

போர்ச்சுகல் அணியின் முக்கிய வீரரும் கேப்டனுமாக உள்ள ரொனால்டோ சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணலில் கிளப்பை, தரக்குறைவாக பெரியதாகவும், புதிய மேலாளர் எரிக் டென் ஹாக்கை மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

மான்செஸ்டர் யுனைடெட்டை வெளியிட்ட அறிக்கையில், "கிறிஸ்டியானோ ரொனால்டோ பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு உடனடியாக நீக்கப்படுகிறார். இந்த முடிவு உடனயாக அமலுக்கு வருகிறது. ஓல்ட் ட்ராஃபோர்டில் 346 போட்டிகளில் 145 கோல்களை அடித்த அவரது மகத்தான பங்களிப்பிற்காக கிளப் அவருக்கு நன்றி தெரிவிக்கிறது.

மேலும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துக்கள். மான்செஸ்டர் யுனைடெட்டில் உள்ள அனைவரும் எரிக் டென் ஹாக்கின் கீழ் அணியின் முன்னேற்றத்தைத் தொடர்வதிலும், ஆடுகளத்தில் வெற்றியை வழங்குவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதிலும் கவனம் செலுத்துகின்றனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் வெளியேறுவது உறுதிசெய்யப்பட்டது. தொடர்ந்து ரோனால்டோவின் மேனேஜர் ஜார்ஜ் மெண்டிஸ் பல கிளப்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதான கூறப்படுகிறது. 



 


Post a Comment

Previous Post Next Post