Ticker

6/recent/ticker-posts

Ad Code



'வாய்ப் புண்'

எனக்கு வாய்ப்புண் அடிக்கடி ஏற்படுகின்றது. இதற் காகப் பல வைத்தியரிடம் சிகிச்சை எடுத்தும் நிரந்தரக் குணம் கிடைக்கவில்லை . இது பற்றிய பூரண விளக் கத்தை தருவதோடு இந்நோயிலிருந்து மீள்வதற்குரிய
ஆலோசனையையும் தரவும்.


பதில்:
வாயின் சுகாதாரத் தன் மையைப் பேணுவ மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு விட யமாகும். நாம் சிரமமின்றி உணவை உட்கொள்வதற்கும் மற்றவர்களுடன் நெருக்கமாகப் பேசிப் பழகுவதற்கும், வாயின் சுகாதாரத் தன்மையைப் பேணுவது அவசியமாகும். அவ்வாறு நாம் தினமும் பேணத்தவறினால் வாய் துர்நாற்றம், வாய்ப் புண், பற்சூத்தை போன்ற நோய் நிலைகள் ஏற்படும்.

அதில் வாய்ப்புண் என்பது அநேகமா னோருக்கு வயது எல்லையின்றி ஏற்ப டக்கூடிய ஒரு நோயாகும். இது பாரிய விளைவுகளை பொதுவாக ஏற்படுத்தி விட்டாலும் நோயாளி உணவு உண்ப திலும் பேசுவதிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். வாய்ப்புண் வெள்ளை நிற சிறியளவிலான வீக்கமாக ஆரம் பித்து இறுதியில் புண்களை ஏற்ப டுத்தும். இங்கு நாக்கு, முரசு, உதடு, சொத்தையின் உட்பகுதி போன்ற இடங்களில் பொதுவாகப் புண்கள் ஏற்படுகின்றன. இதன்போது எரிவுடன் கூடிய வலி ஏற்படுவதோடு நாக்கை அசைப்பதிலும் சிரமங்கள் ஏற்படும்.

வாய்ப்புண் ஏற்படுவதற்குக் கார ணங்களாக வாயின் சுகாதாரத் தன் மையைத் தினமும் பேணாமலிருத்தல், செயற்கைப் பற்களை அணிதல், உணவு வகைகள் ஒவ்வாமை, விட்ட மின்களின் குறைபாடு, வாயில் ஏற்படு கின்ற காயம், ஒரு சில கிருமிகள், மன அழுத்தம், ஒரு சில குடல் நோய்கள், ஒரு சில மருந்துகளின் தாக்கம், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதினால் ஏற்படு கின்ற நோய்கள், தொடர்ச்சியாக மூக்கு அடைப்பின் காரணமாக வாய் மூலம் சுவாசிக்கும் போது வாய் காய்தல் போன்ற நிலைகளில் ஏற்படலாம். 

உணவு அலர்ஜியாக புளிப்புத் தன்மையுடைய பழங்கள், கோப்பி, சொக்லேட், முட்டை, சீஸ், நிலக்க டலை, போன்றவைகள் காணப்படு கின்றன. விட்டமின்களில் விட்டமின் B12, இரும்புச் சத்து, Folic acid, Zinc | போன்றவைகளின் குறைபாட்டினால் வாய்ப்புண் ஏற்படுகின்றன. இவ்விட் டமின்களின் குறைபாடு பழவகைகள், கீரைவகைகள், மரக்கறி போன்ற வைகள் உட்கொள்ளாமையின் காரண மாகவே ஏற்படுகின்றன. அத்துடன் செயற்கைப்பல் கட்டியிருப்பவர்கள் அல்லது பல்லுக்குக் கம்பி வளயம் போட்டிருப்பவர்கள் தினமும் இரண்டு முறையாவது பல்லைச் சுத்தம் செய்தல் முக்கியம். இந்நிலையில் உணவுத் துணிக்கைகள் தேக்கமடைந்து தொற் றுதல் ஏற்படுகின்றன.

இந்நோயின் போது உணவு மற்றும் பானங்கள் உட்கொள்ள முடியாமையின் காரணமாக உடம்பில் நீரின் அளவு குறைவதனால் அதிக தாகம், சோர்வு, நாவரட்சி போன்ற குறிகுணங்கள் ஏற்படும்.

அத்துடன் எரிவுடன் கூடிய நோவு ஏற்படுவதோடு சிறுபிள்ளைகளில் இந்நிலை ஏற்பட்டால் நிம்மதியற்றவர் களாக இருப்பார்கள், மேற்கூறிய அறி குறிகளுடன் காய்ச்சலும் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரைக் கலந்தா லோசிப்பது முக்கியம்.

இந்நோய் ஏற்படாமலிருக்க வேண் டுமானால் மேற்கூறிய காரணிகளைக் கருத்திற் கொள்வதோடு வெங்காயம் கீரை வகைகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அத் துடன் பழவகைகளையும் (புளிப்புத் தன்மையுடைய பழவகைகள் தவிர) அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

அத்துடன் சீனி, பதனிடப்பட்ட உணவு வகைகள், மீன், இறைச்சி போன்றவைகளையும் தவிர்த்தல் வேண்டும். மேலும் Chewing gum, Lozengers, வெற்றிலை, புகைத்தல் போன்றவைகளைத் தவிர்ப்பதும் முக் கியம். ஒரு சில வேளைகளில் பற்பசை களில் இருக்கக் கூடிய Sodium LaurylSulphate எனப்படும் இரசாயனப் பதார்த் தமும் வாய்ப்புண்ணை ஏற்படுத்தக் கூடியது. எனவே நீங்கள் பாவிக்கும் பற்பசைப் பெட்டிகளில் மேற்குறிப் பிட்டுள்ள பதார்த்தம் குறிப்பிடப்பட் டுள்ளதா என அவதானித்து அதைத் தவிர்த்துக் கொள்ளவும். 

மேலும் மென்மையான Tooth brush ஐப் பாவிப்பதும் முக்கியம். வாய்ப் புண்ணினால் அடிக்கடி பாதிக்கப்படு வர்கள் மேற்குறிப்பிட்டுள்ள தடுப்பு முறைகளைக் கையாள்வதோடு வைத்தியர்களின் ஆலோசனைப் படி விட்டமின்களையும் பாவிக்க வேண்டும். சிறுபிள்ளைகளில் வாய்ப்புண் ஏற்பட்டால் போதிய ளவு நீர் ஆகாரங்களைக் கொடுக்க வேண்டும். ஆனாலும் தொடர்ந்தும் வாய்ப்புண் ஏற்பட்டுக் கொண்டே இருக்குமானால் வைத்திய நிபுணர் ஒருவரைக் கலந்தாலோசிப்பது நன்று. மன அழுத்தத்தினால் வாய்ப்புண் ஏற்படுகின்றதென்றால் மனநல சிகிச்சை நிபுணர் ஒருவரைக் கலந்தாலோசிப்பது முக்கியம்.


இறுதியாக வாசகர்களுக்கு விசேடமாக செயற்கைப்பல் கட்டியிருப்பவர்களுக்கு ஒரு செய்தியாக, அதாவது தினமும் பல்லைச் சுத்தம் செய்து உணவுத் துணிக்கைகள் மூலம் உங்கள் வாயில் தொற்றுதல் ஏற்படாதவாறு தவிர்த்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன்.
DR.NASEEM


 


Post a Comment

0 Comments