Ticker

6/recent/ticker-posts

Ad Code



MI vs KKR | அறிமுக போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்..! யார் இந்த அஷ்வினி குமார்?


ஐபிஎல் தொடரில் அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வீரர் அஸ்வனி குமார் அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் செய்ய முடிவெடுத்ததால், முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கிய கொல்கத்தா அணியில், அதிகபட்சமாக அங்க்கிரிஷ் ரகுவன்ஷி மட்டும் 26 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்த இன்னிங்சின்போது, 4ஆவது ஓவரை வீசினார் அஸ்வனி குமார். கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானேவின் விக்கெட்டை தனது ஐபிஎல் அறிமுக போட்டியின் முதல் பந்திலேயே வீழ்த்தி கவனத்தை ஈர்த்தார். அதுமட்டுமின்றி, ரிங்கு சிங், மணீஷ் பாண்டே, ஆண்ட்ரே ரஸல் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தி மலைக்க வைத்தார் அஸ்வனி குமார். ஐபிஎல் தொடர்களில், அறிமுகமான போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார் அஸ்வனி குமார்.

இந்த போட்டியில் 3 ஓவர்கள் மட்டுமே வீசிய அஸ்வனி குமார், 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16.2 ஓவர்களில் 116 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 12.5 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.

யார் இந்த அஸ்வனி குமார்?:

23 வயதான அஸ்வனி குமார் மொகாலியை சேர்ந்தவர். உள்ளூர் போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 2 ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளையும், 4 லிஸ்ட் ஏ கிரிக்கெட்டையும் விளையாடியுள்ளார்.

அவர் இறுதி ஓவர்களை நன்றாக வீசக்கூடியவர் என பெயர் பெற்றவர். கடந்த 2025 மெகா ஏலத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி இவரை 30 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

news18

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments