Ticker

6/recent/ticker-posts

லிமரைக்கூக்கள்!


பெருமைக்குத் தானே தங்கம்

காந்தி கனவு நிறைவேறுமா என்ன

பகலிலே பறிபோகும் அங்கம் 

 

அன்பைச் சுரக்கட்டும் விழிகள்

தாயுளத்தோடு எதையும் நோக்க

பிறகு எதற்கு மொழிகள்

 

நானோர் அழகிய ரோஜா

முட்களைத் தாண்டி எனை நேசிக்கிறாய் 

நீயே எந்தன் ராஜா

 

எங்கும் தனியார் மயம்

பிறகு எதற்குத் தான் அரசு?

மனதில் எழுகிறது ஐய்யம் 


ராஜூ ஆரோக்கியசாமி
திருச்சி, தமிழ்நாடு, இந்தியா  



 


Post a Comment

1 Comments

  1. இவ்வார வேட்டை வார (26.11.2022) இதழில் ()எனது லிமரைக்கூக்கள்... சிறப்பாக வெளியிட்ட ஆசிரியருக்கும் மற்றும் குழுவினருக்கும்
    என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

    ReplyDelete