மலேசியாவில் புதிய அரசாங்கத்தை அமைக்கும் கூட்டணிகளுக்கான காலக்கெடு நாளை வரை நீட்டிப்பு

மலேசியாவில் புதிய அரசாங்கத்தை அமைக்கும் கூட்டணிகளுக்கான காலக்கெடு நாளை வரை நீட்டிப்பு

மலேசியாவின் புதிய அரசாங்கத்தை அமைக்கும் கூட்டணிகளுக்கான காலக்கெடுவை மலேசிய மாமன்னர் மேலும் 24 மணி நேரத்திற்குக் கூட்டியிருக்கிறார்.

இன்று 2 இரண்டு மணிக்குள் தங்களை ஆதரிக்கும் மற்ற கட்சிகளின் பெயர்களையும், அடுத்த பிரதமரை ஆதரிக்கும் வேட்பாளர்களின் பெயர்களையும் கூட்டணிகள் மாமன்னரிடம் சமர்ப்பிக்கவேண்டும் எனக் காலக்கெடு கொடுக்கப்பட்டிருந்தது. 

ஆனால் மலேசியப் பொதுத்தேர்லில் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற கூட்டணிகளாக உருவெடுத்த பக்கத்தான் ஹராப்பான், பெரிக்கத்தான் நேசனல் ஆகியவை இன்னமும் அவற்றைச் சமர்ப்பிக்கவில்லை. 

மலேசியாவின் முன்னாள் பிரதமர் முஹிதின் யாசின் தமக்கு பாரிசான் நேசனல், சபாவின் GRS, சரவாக்கின் GPS ஆகியவை ஆதரவளிப்பதாகக் கூறியிருந்தார்.

ஆனால் இப்போது அவர் எதிர்பார்த்ததைப் போல எதுவும் நடப்பதாகத் தெரிவில்லை.

GPS-சின் தலைவர் பெரிக்கத்தான் நேசனல் கூட்டணியுடன் எவ்வித இணக்கக் குறிப்பும் கையெழுத்தாகவில்லை என்று கூறியிருக்கிறார். 

ஆனால் பெரிக்கத்தான் நேசனல் கூட்டணிக்கு ஆதரவு வழங்கப்படும் என்று ஏற்கனவே ஒப்புக்கொணடிருந்தார். 

பாரிசான் நேசனல் கூட்டணியின் தலைவர் அஹ்மது ஸாஹிட் (Ahmad Zahid) எந்தக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என்பதையோ யாருக்குப்  பிரதமர் பொறுப்பை வழங்கலாம் என்பதையோ  இன்னமும் முடிவு செய்யவில்லை என்று சொல்லியிருக்கிறார். 

இந்நிலையில் பாரிசான் நேசனல், பக்கத்தான் ஹராப்பான் ஆகியவை இன்று ஹோட்டல் ஒன்றில் சந்தித்துள்ளன. அவை ஒன்று சேரக்கூடும் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.
seithi
ஆதாரம் : CNA/zl(mi)


 


Post a Comment

Previous Post Next Post