சவுதி அரேபியாவின் வெற்றி உலகக் கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய அதிர்ச்சி

சவுதி அரேபியாவின் வெற்றி உலகக் கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய அதிர்ச்சி

ஆர்ஜென்டினாவுக்கு எதிரான தேசிய அணியின் ஆச்சரியமான வெற்றியைக் கொண்டாடுவதற்காக சவூதி அரேபியாவில்  (புதன்கிழமை) அனைவருக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை சவூதி அரேபிய அரசர் விடுத்துள்ளார்.

அரச மற்றும் தனியார் துறையின் அனைத்துத் துறை ஊழியர்களுக்கும், அனைத்துக் கல்வி நிலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் ஆர்ஜென்டினாவும் சவுதி அரேபியாவும் நேற்று பலப்பரீட்சை நடத்தியிருந்தன.

இந்தப் போட்டியின் முதல் பாதியின் 10 ஆவது நிமிடத்தில் கிடைத்த பனால்ட்டி வாய்ப்பை கோலாக்கிய ஆர்ஜென்டினா, முதல் பாதியில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ஆர்ஜென்டினா போட்ட மூன்று கோல்கள் விதிமுறைகளை மீறியது என்ற அடிப்படையில் நடுவரால் நிராகரிக்கப்பட்டிருந்தன. எனினும் இரண்டாவது பாதியில் சுதாகரித்து விளையாடிய சவுதி அரேபியா 48 ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றைப் போட்டு, கோல் எண்ணிக்கையை சமப்படுத்தியது.

தொடர்ந்தும் சிறப்பாக விளையாடிய சவுதி அரேபியா 53 ஆவது நிமிடத்தில் மற்றுமொரு கோலைப் போட்டு, ஆர்ஜென்டினாவிற்கு அதிர்ச்சி அளித்தது.

இதன்பிரகாரம் 2 க்கு 1 என்ற கோல்கள் கணக்கில் சவுதி அரேபியா முன்னிலை பெற்றிருந்த நிலையில், இறுதி வரை மேலதிக கோலை போடும் ஆர்ஜென்டினா அணியின் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

போட்டியின் இறுதியில் 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற சவுதி அரேபிய அணி சி குழுவிற்கான புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

சவுதி அரேபியாவின் வெற்றி உலகக் கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய அதிர்ச்சியாக கருதப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.




 


Post a Comment

Previous Post Next Post