இந்திய அணியின் அடுத்த கேப்டன் அவர் தான்..! முன்னாள் கேப்டன் அசாருதீன் அதிரடி

இந்திய அணியின் அடுத்த கேப்டன் அவர் தான்..! முன்னாள் கேப்டன் அசாருதீன் அதிரடி

இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட். தோனிக்கு அடுத்த இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட், கெரியரின் தொடக்கத்தில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் அவ்வப்போது சொதப்பியதால், அவர் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியானது. அதனால் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலிருந்து ஓரங்கட்டப்பட்ட ரிஷப் பண்ட், டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக ஆடி, மீண்டும் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம்பெற்றார்.

ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக ஆடி மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடிய ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிராகவும் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை ஆடினார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் சதமடித்து, அதே தன்னம்பிக்கையுடன் டி20 கிரிக்கெட்டில் அசத்தினார். ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆடாத ரிஷப் பண்ட், 2வது போட்டியில் அதிரடியாக ஆடி 40 பந்தில் 77 ரன்களையும், 3வது போட்டியில் 62 பந்தில் 78 ரன்களையும் குவித்தார்.
முன்பெல்லாம், சூழலுக்கும் பந்துக்கும் ஏற்ப ஆடாமல், தவறான ஷாட்டை ஆட முயன்று மொக்கையாக ஆட்டமிழந்துகொண்டிருந்த ரிஷப் பண்ட், இப்போதெல்லாம், அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தும், மற்ற பந்துகளில் சிங்கிள் ரொடேட் செய்தும் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். 

கடந்த ஐபிஎல் சீசன் ரிஷப் பண்ட்டுக்கு சரியாக அமையாத நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக அபாரமாக ஆடி அசத்திய ரிஷப் பண்ட், இந்த சீசனுக்கான டெல்லி கேபிடள்ஸ் அணியின் கேப்டனாக வளர்ந்துள்ளார். 

இந்நிலையில், ரிஷப் பண்ட் இந்திய அணியின் அடுத்த கேப்டனாவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள முகமது அசாருதீன், ரிஷப் பண்ட் கடந்த சில மாதங்களாக அபாரமாக ஆடியிருக்கிறார். அவருக்கு கடந்த சில மாதங்கள் சிறந்தவையாக அமைந்துள்ளன. 3 விதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடிவருகிறார். இந்திய அணியின் அடுத்த கேப்டனாக ரிஷப் பண்ட்டை தேர்வாளர்கள் பார்த்தால், ஆச்சரியப்படுவதற்கில்லை. ரிஷப் பண்ட்டின் அட்டாக்கிங் கிரிக்கெட் இந்திய கிரிக்கெட்டை மேம்படுத்தும் என்று அசாருதீன் தெரிவித்துள்ளார்.
asianetnews



 


Post a Comment

Previous Post Next Post