சட்டத்தில் சில மாற்றங்கள் தேவை மார்க்கத்திற்கு முரணாகாத வகையில்...!

சட்டத்தில் சில மாற்றங்கள் தேவை மார்க்கத்திற்கு முரணாகாத வகையில்...!


பெண் காதி நீதிபதியாக வர முடியுமா என்ற கேள்விக்கு உலமாக்களின் பதில் இதுவரை முடியாது என்ற ஆதாரத்தோடு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

,இருந்தும் பெண்ணியல் வாதிகளும் அவர்களுக்கு சார்புடையவர்களும் பெண் ஒருவரை நீதிபதியாக நியமிக்க முடியும்.அது ஹனபி மதுஹபில் குறிப்பிடப்பட்டுள்ளது, என்றும் இதனை இஸ்லாம் தடுப்பதாக குர்ஆனில் ஹதீஸில் வரவில்லை என்று வாதாடி நிற்கின்றனர்.

இதுகுறித்து நாம் ஒரு ஆலிமிடம் விளக்கம் கேட்டதற்கு தெளிவான பதிலை தந்திருக்கிறார் 

நிர்பந்தத்தின் அடிப்படையில் பெண் ஒருவர் தலைமை தாங்குகிறார் என்றாலும் அது நிர்வாக விடையத்தில் மாத்திரமே என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மேலும் பெண்னொருவர் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்வது அதை ஊக்குவிப்பது பாவம் என்றும், ஹனபி மத்ஹபில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்பவற்றை கவனத்தில் கொள்ளும்படியும் குறிப்பிட்டு இருக்கிறார்.

பெண் ஒருவரை நியமிக்க வேண்டும் ஏன் என்பது பெமினிஸ்ட்களின் கொள்கைவாதத்திலிருந்து வந்த ஒன்று. இதனை செயற்படுத்தும் முகமாக அவர்கள் ஏனைய மூன்று மதுஹப்களும் தவிர்த்துக் கொள்ளும்படி சொல்லி இருக்கும் பொழுது அதனை கவனத்தில் கொள்ளாது  ஹனபி மதுஹப்பை தூக்கிப் பிடிக்கின்றனர்.

பெரும்பான்மை முஸ்லிம்கள் ஷாபிஈ மதுஹப்பை எல்லா விடயங்களிலும் கவனத்தில் கொள்ளும் பொழுது இவர்கள் வேலி பாய்வது எதற்காக என்று சிந்திக்க வேண்டும்.

1997,1998 காலப்பகுதியில் சீடா நிறுவனம் புத்தளத்தில் இருந்த அரசு சார்பற்ற நிறுவனங்களை பங்காளிகளாக தெரிவு செய்து அவற்றிற்காக பாலினம் தொடர்பான விழிப்புணர்வுகளை பெண்கள் மத்தியில் ஏற்படுத்தி வந்தனர். இன்று அது மேலும் ஒரு படி மேலே சென்று பெண்ணியல் வாதம் என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்டு ஆண் பெண் சமத்துவம் என்ற கொள்கை வாதம் அடிப்படையில் பல வேலை திட்டங்களை செய்து வருகின்றனர்.

வீட்டு வன்முறை காரணமாக பெண்கள் உடலியல் உபாதைகளையும் மன அழுத்தங்களையும் சுமந்து கொண்டு நோயாளிகளாகவும் தனது பிள்ளைகளை பராமரிக்க முடியாதவர்கள் ஆகவும் இருக்கின்றனர் என்பது உண்மை. அது எவ்வாறு ஏற்பட்டது என்பதை ஆராயும் பொழுது நான் எனது அனுபவத்தில் கண்டது கணவன்மார் போதைப் பொருட்கள் பாவனை உடையவர்களாக இருப்பது,அசாதாரண மன நிலையுடையவர்களாக,ஆளுமை உடையவர்களாக இருப்பது என்பது அவர்கள் மனைவிமார்களில் வன்மத்தை திணிக்க காரணமாகிறது.

இதற்கு உளவளஆலோசனை சில சமயங்களில் சிகிச்சை புனர்வாழ்வளிக்கும் முகாமிற்கு அனுப்புதல் என்பன ஆக்கபூர்வமான தீர்வாக அமையும்.

இதைவிட நாட்டில் பல செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியும் உள்ளது

இதை விடுத்து திருமண விவாகரத்து சட்டத்தை மாற்றி ஆண்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமை உனர்வாழ்வு என்பவற்றை தவிர்த்து தண்டனை வழங்குவது அல்லது அவர்களது உரிமையை கட்டிப்போடுவது எந்த வகையில் ஏற்புடையது?

(சட்டத்தில் சில மாற்றங்கள் தேவை மார்க்கத்திற்கு முரணாகாத வகையில்)

நாம் பெண்களுக்காக போராடுகின்றோம் என்று பால் நிலை சமத்துவத்தை பிரகடனப்படுத்தி மார்க்கத்திற்கு ஒவ்வாத விடயங்களை புகுத்தும் இந்த முஸ்லிம் பெண்மணிகள் யார் என்று பார்த்தால்,அரசு சார்பற்ற நிறுவனங்களில் வேலை செய்து கொண்டிருப்பவர்களாக இருக்கின்றனர்.

இவர்கள் அரசியல்வாதிகளுக்கும் சமூக தலைவர்களுக்கும் சமூக நலன் விரும்பிகளுக்கும் தமது கொள்கையை மறைத்து பெண்கள் துன்பப்படுகிறார்கள்,அதற்கு காரணம் காதிநீதிமன்றமும் ஒன்று என்ற கருத்தை உட்புகுத்தி முஸ்லிம்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி சர்வதேச நிறுவனங்களுக்கு தவறான புள்ளி விவரங்களை கொடுத்து,முஸ்லிம்களுடைய நிலை பிற்போக்கானது என்ற கருத்தை நிறுவி ஆண் பெண் சமத்துவத்தை நிலை நிறுத்த போராடிக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான் உண்மை.

இவை அறியாத நம்மவர்களும் இந்த விடயத்திற்குள் நாம் எவ்வாறு உள் நுழைந்தோம் என்பதை சிந்திக்க தவறி அவர்களும் பெமினிஸ்ட்களின் தூரநோக்கு சிந்தனை  கொள்கைக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது வருந்தத்தக்க விடயம்..


தனது கொள்கையை மறைத்து குர்ஆனுக்கு,அலிசப்ரியும் ரவூப் ஹக்கீம் அவர்களும் விளக்கம் கொடுக்கும் இடத்தில்  கெண்டுவந்து விட்டுள்ளனர் .

றிபான இஸ்மாயில்
Psychological counselor/social activitie


 

Post a Comment

Previous Post Next Post