Ticker

6/recent/ticker-posts

யாரேனும் ஒருவர்...!


சிறிது 
தூரத்திற்குப்பின் 
என் பயணம் 
நிறைவடையலாம். 

வானில் வலம்
வந்த சூரியன் அந்தியில்
மொத்தமாய் 
அடிவானில் மறையலாம். 

தன் தேடலை 
முடித்தப் பறவைகள்
இனிதே
கூடு திரும்பலாம்.

இக்கவிதை 
வாசிக்கப்படாமல்
சிலர் 
கடந்து போகலாம்.

உங்களில்
யாரேனும் ஒருவர்
இதே கவிதையை எழுதி 
முடித்திருக்கலாம்.
ஆக்கம் 
பாரியன்பன் நாகராஜன்
குடியாத்தம் 


 


Post a Comment

0 Comments