Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம்-5

(மறுநாள்  காலையிலே எல்லோரும் சொல்லி விட்டார்கள் பாட்டி இன்று இரவுக்கு கதை சொல்லாமல் தூங்கிட வேண்டாம் .சித்தப்பா வீட்டுக்கும் போக வேண்டாம் .என்று கூறி விட்டு அவர் அவர் வேலையில் கவனம் செலுத்திக் கொண்டார்கள் .இரவும் வந்தது கதை கேட்டிடும் ஆர்வமும்  நிறைந்தது. எல்லோரும் வேளையோடு சாப்பிட்டு விட்டு. அவர்களது போர்வையுடன் முற்றத்துக்கு வந்து அமர்ந்து விட்டார்கள் . 

பாட்டி கொஞ்சம் குசும்புக் காரி  உடனே சொன்னார் கதை சொல்லலாமா வேண்டாமா என்று இருக்கு. தொண்டையெல்லாம் வறண்டு போச்சு. யாராவது கொஞ்சம் குளிர்பானம் வாங்கி தந்திங்களா? என்று கேட்டார் .ஆஹா கடுப்பாகி விட்டான் பாட்டியின் மூத்த பேரண் மோகன் .ஏன் பாட்டி நீங்க விடிந்து இத்தனை மணி வரை மூச்சு விடாமல் இருந்து விட்டு .இப்போது என்ன தண்ணி கிண்ணி என்று நாடகம் போடுவது. கதையை சொல்லி முடிங்க உங்களுக்கு மற்றத் தண்ணி வாங்கி தருகிறேன். என்றான் கொஞ்சம் கேலியும் கோபமும் கலந்து  .

பாருடா என் பேராண்டியின் கதையை எனக் கூறி பாட்டி சிரித்து விட்டு. கதை சொல்லத் தயாரானார் ஆமா எந்த இடத்தில் நிறுத்தினேன். என வினா தொடுத்தார் . அதுவா பாட்டி இரண்டாவது மாப்பிளையும் அதிர்ச்சியில் இறந்ததோடு. என்றார்கள் பேரர்கள் .ஓகே அப்போ சரி தொடங்குகிறேன் .கேளுங்கள் என்று பாட்டி வெத்தலையை அடைச்சுக் கொண்டு ஆரம்பித்தார்) 

இனி என்ன வழமை போல் விடியக் காலை கண் விழித்த புதுப் பெண்ணுக்கு இடி விழுந்தாப் போல் இருந்தது .தன் கணவர் கட்டில் அருகே இரத்தம் கொப்பளித்த வாறு கிடப்பதைப் பார்த்து  . உடனே ஓவென கூக்குரல் எழுப்பினாள். தன் செல்ல மகளின் அழுகுரல் கேட்டு பதறிய படி ராஜா ராணி இருவரும் ஓடி வரும் போதே அரண்மனைக் காவலாளர்களும் .ஒன்று கூடி விட்டார்கள் .

அறையின் உள் ராஜா ராணி மாத்திரமே நுழைந்தார்கள் . நுழைந்த ராஜா மறு நொடியே நெஞ்சப் பிடித்த படி சாய்ந்து விட்டார் . ராணி செய்வது அறியாது கலங்கிப் போனார். காவலாளர்கள் ராணியின் கட்டளைப் படி மகாராஜாவை வைத்தியரிடம் .அழைத்துச் செல்ல. மந்திரியார் மாப்பிள்ளை வீட்டாருக்கு தகவல் அனுப்பி விட்டு . மேற்கொண்டு செய்ய வேண்டிய காரியங்களை ஒவ்வொருவருக்கும்  பொறுப்பு அளித்தார்  .மணக் கோலம் களையவில்லை சிறிய இளவரசி மனக்கோலமாகி விட்டார் .ஆம் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியால்  மனநிலை பாதிக்கப் பட்டு ஓரமாய் ஒதுங்கி நின்று யாரோ இவரோ போல் சிறு பிள்ளையாய் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள் . 

மாப்பிளையின் வீட்டில் இருந்து எல்லோரும் வந்து விட்டனர். மகனின் உடலை தாங்களே கொண்டு போவதாக கூறி  சம்மந்தி மகாராஜாவின் நிலையையும் மருமகளின் நிலையையும் பார்த்ததுமே அவர்கள் வாக்கு வாதத்தில் இறங்காமல்   . தலையில் அடித்துக் கொண்டே மகனின் உடலோடு விரைந்து விட்டார்கள் . ஊர் வாய் ஏதேதோ சொல்லி  முடிக்காமலே விழுங்கி  விடுகின்றது.  பிறகு என்ன பேய் அரண்மனை என்போரும் ராசி இல்லாத பெண் என்போரும் .பாவம் அந்த இரு மாப்பிள்ளை என்போரும் .மக்களுக்கு அரசர் மேல் இருந்த பயமும் மதிப்பும் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து. அனுதாபம் மட்டுமே நிலைத்து விட்டது.  மகளுக்கும் மகாராஜாவுக்கும் மாறி மாறி வைத்தியம் பார்ப்பதுக்கே மகாராணிக்கு நேரம் சரியாக இருந்தது. 

நாட்டு மக்களைப் பற்றி அவர் சிந்திக்கவே இல்லை.  மாதம் தோறும் கொடுக்கும் நன்கொடைகளையும் சரி வர செய்வதில்லை. பொறுமை இழந்து மக்கள் அடுத்த நாட்டு மன்னரிடம் அடியாளாகவும் அடிமைகளாகவும் .போய் இணைந்து விட்டனர்  .சற்றும் எதிர் பாராத விதமாய் அரச மகாராஜா மரணித்தார் .

 அவரின் உடல் அடக்கம் செய்யும் போதும் மகள் கண்டுக்காமல் குழந்தை போல் அமர்ந்து இருந்தாள்  .

(என்றதும் பாட்டி ஐயோ பாவம் என்றார் பாட்டியின் இரண்டாவது மருமகள் மலர். )
(தொடரும்)
கலா


 


Post a Comment

1 Comments

  1. அருமை நன்றி அண்ணா

    ReplyDelete