Ticker

6/recent/ticker-posts

இது புது வண்ணம் தான்...!


மொத்தமும் பூசப்பட்ட வண்ணச்சுவரில் 
விருப்பமில்லாமல் பெயர்ந்து விழுகிறது 
சுண்ணாம்பில் கலந்த கடைசித்துளியாய்....

சிறு குழுப்பல்களில் மையம் கொண்ட
வண்ணத்தின் நடுவில்
கேள்விச்சுழல்கள் ஏராளம்
ஆனால் பதில் வரும் வரை
சுழல் நிறுத்தப்படாமல் இருத்தல் அவசியம்...

நீ கருமையாக இருக்க ஆசைபடு
வெண்மை வேண்டுமென அடம்பிடி
பிடிக்காத வண்ணத்தை
ஒருபோதும் சுவருக்கு போர்த்தாதே
மனதிற்கும்தான்....

தூரிகைகள் அழுவதை
நீ என்றாவது பார்த்ததுண்டா
பிய்ந்த நீரில் எஞ்சியுள்ள 
வண்ணங்களை அனைத்து
ஆசைப்பருகி
அய்யகோ அந்த மகிழ்வு உள்ளது
உணர கற்றுக் கொண்டாயா...
இல்லை
உரசி உரசி மீண்டும்
வண்ணமேற்க காத்திருக்கும்
சுவருக்கும் வண்ணத்திற்கும்
இடையேயான அழுகையை 
பார்த்திருக்கிறாயா......

கண்ணீர் வண்ணங்களுக்கு
சேர்மானமாகிறது
பல இடங்களில்
பதில் கூற இயலாத சூழல்களில்
வண்ணமையப்படும் சுழல்களில்.....!

இது புது வண்ணம்தான்
நம்பித்தொலையுங்கள் உண்மையிலே.....!

கவிஞர் சே கார்கவி
நாகப்பட்டினம்


 


Post a Comment

0 Comments