Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-139


"குழந்தாய், என்னை எப்படி மேலுக்குக் கொண்டு செல்லப் போகிறாய்?" ஆர்வத்துடன் பெரியவர் கேட்டார். 

"உங்களை மேலே கொண்டு செல்வதை நாங்கள் பார்த்துக் கொள்வோம் பெரியவரே! நீங்கள் மேலே செல்வதற்கான தயார் பட்டால் சரி" என்றான் செரோக்கி பணிவாக. 

"சூரியன் மத்திக்கு வரும்போது நான் தயார் நிலைக்கு வந்து விடுவேன்; என்னைக் கொண்டு செல்வதற்கான ஆயத்தப் படுத்துங்கள்" என்ற பெரியவர், தனது பயண ஆயத்த வேலைகளில் ஈடுபடலானார். 

செரோக்கி பெரியவரிடம் விடைபெற்றுக்கொண்டு, பெரியகல்லுச்சிக்குச் செல்வதற்காக  வேரேணி வரை நடக்கலானான். 

கானகத்துக்குள் பல நூறு மொழிகள் இருந்தபோதிலும், புரோகோனிஷ் கிராமத்தவர்களுள்  அதிகம் பேர் தமிழையே பேசுகின்றனர்.  பெரியவரும் தமிழ்தான் பேசுகின்றார். 'கிரீடி' வாழ் மக்கள் தமிழைப் பேசு மொழியாகவும், அரபை எழுது மொழியாகவும் கொண்டிருந்தனர் என்பதற்குத் தனது சிறு வயதில் பெரியவர் தன்னோடு வைத்திருந்த தந்தையின்  நூல்கள் அரபு லிபியிலானதாக இருந்தது. அவர் கல்லடியில் அதனை வைத்துக்கொண்டுதான் 'பஆல்' பார்த்து நல்லது, கெட்டதுகளை அறிந்து வனவாசிகளுக்குச்  சொல்வார். 

தமிழ் மிகப்புராதன மொழியாகும். முற்றுந்துறந்த முனிவர் ஒருவர் உலகமெங்கும் சுற்றி தமிழ் மொழியைப் புழக்கத்துக்குக் கொண்டு வந்துள்ளார் என்றொரு  வாய்மொழி வரலாறொன்று உண்டு. புரோகோனிஷ் கிராமம் தோன்றிய காலத்தில்  அம்முனிவர் இக்கிராமத்துக்கும்  வந்திருக்கலாமோ என்று கூட எண்ணத் தோன்றுகின்றது.  அந்நியரை  அண்டவிடா வனப்பகுதிக்குள் அகத்தியத்தமிழ் நுழைந்ததெப்படி என்பது இன்றும் புரியாததொரு விடயமாகும்.  கிரீடியிலும் இதுவே பேசுமொழியாக இருந்திருக்கின்றது.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே அராபியரும் மேல் நாட்டிலுள்ள பிரஜாதியினரும்  உலகம் சுற்றி வாணிபம் செய்துகொண்டிருந்தபோது,   தமிழ்.நாட்டுக்கும் வந்திருக்கலாம். அதனால்தான் தமிழ் நாட்டில் புழக்கத்திலிருந்த அகத்தியத்தமிழ்,  இங்குமங்கும் புழக்கத்துக்கு வந்துள்ளது! 

வேரேணி வரை நடந்து வந்த செரோக்கி ஏணியில் மெல்ல மெல்ல ஏற  ஆரம்பித்தான்! 
(தொடரும்) 


 


Post a Comment

0 Comments