Ticker

6/recent/ticker-posts

Ad Code



திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-67


குறள் 292
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.

தம்பி.. நீ சொல்லுத பொய்யினால குத்தம் இல்லாத ஒரு நன்மை நடக்கும்னு வச்சுக்கோயேன். அந்த பொய்கூட வாய்மைங்கிற அடையாளத்தை பெறும் தம்பி. 

குறள் 294
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.

தம்பி.. கொஞ்ச பேரு மனசால கூட பொய்யைப் பத்தி நெனைய்க்காம இருப்பாவொ. அவொள்லாம், மக்கள் மனசுல எப்பமும் நீங்காத இடம் பெற்று இருப்பாவொ தம்பி. 

குறள் 295
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.

தம்பி.. ஒப்புக்கு பேசாம, மனசார உண்மை பேசுதவொ, இருப்பாவொ. அவொள்லாம், தவமும், தானமும் செஞ்சிக்கிட்டு இருக்கவங்களை விட, ரொம்ப ஒசத்தி தம்பி. 

குறள் 296
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.

தம்பி.. ஒருத்தன் பொய் பேசாமலே ஒரு வாழ்க்கை வாழ்ந்தாம்னு வச்சுக்கோ.. அவனுக்கு அதை விட புகழான வாழ்க்கை வேற எதுவும் இல்லை. அந்த வாழ்க்கை அவனுக்கு எல்லா அறவழி நலன்களையும் அளிக்கும் தம்பி.

குறள் 300
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.

தம்பி.. எனக்குத் தெரிஞ்ச அளவுல, வாய்மையை விட ஒசத்தியானது வேற ஒண்ணும் கிடையாது. 
(தொடரும்)



 


Post a Comment

0 Comments