Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம்-6

மலரின் அனுதாபக் குரல் கேட்டு அருகே இருந்த அனைவரும் "ஆமா ஆமா" என்றார்கள் . 

பாட்டியும் சேர்ந்தே ஆமாம் போட்டார்  பாட்டியோடு ஒட்டினாப்புள்ள படுத்திருந்த பாட்டியோட மகளின் மகன் உதயன் உடனே கத்தி விட்டான் .
"ஆமா போட்டது போதும் சீக்கரம் மீதியை சொல்லுங்க அம்மம்மா" என்று.

உடனே பொண்ணம்மா பாட்டி அதட்டி விட்டார் உதயனைப் பார்த்து சரிடா கத்தாதே காது கிழிகிறது என கூறிய கையோடு  பாட்டி கதையை சொல்லிட ஆரம்பித்தார்)

இனி என்ன பெரிய மகராஜாவின் இறுதிக் காரியம் நிறை வேறி முடிந்தது  அடுத்து தன் கணவரோட இடத்தில் அமரப் போவது யார் தாயா மகளா என்னும் பேச்சு அலசல் புலசலாய் வெளியாகத் தொடங்கியது  கேள்வியைப் பரப்பிய அதே நாட்டு மக்களே விடையையும் கூறி விலகிச் சென்றார்கள்  சின்ன மகாராணி  என்ன ஆட்சி பீடம் அமர்வது போலா இருக்காங்க கண்டிப்பா நம்ம பெரிய ராணியம்மா தான் அடுத்து ஆளப் போகும் வாரிசு என்று   அவர்களே பேச்சை முடிவுக்கு கொண்டு வந்து விட்டார்கள்  அதே நிலை தான் அரண் மனைக் காவலர்கள்  அனைவரின்  நாவிலும்  ஆனால் நடந்தது அது இல்லை யாரும் சற்றும் எதிர் பாராத அறிவிப்பு ஒன்றை மகாராணி அறிவித்து விட்டார். 

(அப்படியா மாமி என்றாள் பாட்டியின் மூத்த மருமகள்   ஓமடி யம்மா என்றார் பாட்டி கதை கேட்ட எல்லோரும் கசுபுசுக்கார்கள்  என்னவா இருக்கும் என்னவா இருக்கும்? என்று .

"ஐயோ கொஞ்சம் சும்மா இருங்களேன்" என்றான் மீண்டும் உதயன் அவன் அப்படி கூறியதும் கொஞ்சம் தயக்கத்தோட அவனது தாய் பார்வதி சொன்னாள் 

"இல்லடா உதயன் நாங்க எல்லோரும் மகாராணி தான் ஆட்சிப்பீடத்தில் அமர்வார் என்று நினைத்தோம் அது தான் மாமி அப்படி சொன்னதும் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்து விட்டோமடா. சரி சரி நாங்க சத்தம் போடல"

 என்று மகனிடம் கூறி விட்டு அருகே இருந்தோரைப் பார்த்து கண்ணைச் சிமிட்டி சிரித்தாள் மெதுவாக.   பாட்டி பேரனை பார்த்து கேட்டாள் "ஏன்டா இன்று சும்மா சும்மா கோபப் படுகிறாய்  ராணி மேல ஒரு கண்ணோ உனக்கு" என்று கன்னத்தைக் கிள்ளி சிரிக்க. போங்க அம்மம்மா என்று  கையைத் தட்டி விட்டான் 12 வயதே ஆன பேரன் உதயன்.)

தொடர்ந்தார் பாட்டி.. அது என்ன அறிவிப்பு என்று தெரியுமா  தன்னோட மகளை திருமணம் செய்து மகளோடு வாழும் அந்த ஆடவனே தான் இந்த நாற்காலியில் அமர வேண்டும் அது வரை இது வெறுமையாகவே இருக்கும் ஆனால் அதிகாரம் என் கையில் அனைத்துமே எனது பார்வைக்குக் கீழ் நான் வைப்பதே சட்டம் என் அதிகாரத்தின் போது சேட்டைக்கு இடம் இல்லை நான் என் கணவர் உங்கள் மகாராஜா போன்று இல்லை  தயவுதட்சனை பார்க்க மாட்டேன் குற்றங்கள் நிரூபிக்கப் பட்டால் ஆயுள் தண்டனை அல்லது தலை துண்டிக்கப் படும்   என தண்டுரம் அடித்து ராணியின் கட்டளைகளை அறிவித்த வாறே காவலர்கள் வீதி வீதியாய் பவனி வந்தார்கள்.

மக்கள் எல்லோரும் பீதியோடு கவனித்துக் கொண்டு இருந்தார்கள்  . 

அப்போது  அரண்மனையில் பணிவுரியும் ஒரு சில பெண்கள் கூடி பேசினார்கள் அய்யய்யோ  மகாராஜா இருக்கும் போதே இந்த மகாராணி சரியான கெடுபிடி  இனி சொல்லவே வேண்டாம் அந்த நல்ல மனிதரை இறைவன் பறித்து விட்டானே என்று கூறி பெருமூச்சு இறைத்தார்கள்
(தொடரும்) 
கலா


 


Post a Comment

0 Comments