Ticker

6/recent/ticker-posts

Ad Code



நலம் வாழ -மருத்துவப் பகுதி-6

ஆரோக்கியமாக வாழ பல வழிமுறைகள் இருந்தாலும் அவற்றில் முதன்மையான உணவு 
பற்றிய அறிமுகத் தொடரை பார்த்து வருகின்றோம்.

அதில் சென்ற வாரம் உணவுகளின் வகைகளாக உடலுக்கு வளர்ச்சி தருபவை ,உடலுக்கு சக்தி அளிப்பவை ,உடலை பாதுகாப்பவை என்று பார்த்தோம்.      

எந்தெந்த உணவுகள் எந்தெந்த வகையை சேர்ந்தவை என்று பார்க்கலாம் .ஏனெனில் நாம் உண்ணும் அரிசி ,பருப்பு ,கீரைகள், காய்கறிகள், பழங்கள், தானியங்கள் ,மாமிசம் ,மீன் ,முட்டை ,எண்ணெய் வகை, நெய் பால் போன்றவற்றை உணவை கலவையாக எடுக்கின்றோம். இவை எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன ?

நாம் எந்தெந்த உணவுகளை எவ்வாறு வயதுக்கு ஏற்றவாறு பயன்படுத்தலாம்? என்றும் பார்க்கலாம் .

ஏனெனில் இன்றைய சூழ்நிலையில் ஆரோக்கியமின்மை மற்றும் நோய்களின் அபாயம் நம்மை அச்சுறுத்துகிறது.

ஒவ்வொரு வயதினருக்கும்  ஏற்ற உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணும் பொழுது அந்தந்த வயதுக்கு  ஏற்ப தேவைப்படும் புரதங்களையும் ,சத்துக்களையும் ,தாது பொருட்களையும் உடல் உட் கிரகித்துக் கொள்ளும் அதனால்தான் "மிகினும்  குறையினும் நோய் "... என்று சான்றோன் வள்ளுவ பெருந்தகை திருக்குறளில் சுட்டிக்காட்டியுள்ளார். 

எவ்வாறு சத்து குறைபாட்டில் ஆரோக்கியக் குறைவு ஏற்படுகிறதோ, அதே போல் சத்துக்கள் அதிகமாகும் பொழுதும் நோய் ஏற்படுகிறது. நாம் குறைபாட்டை மட்டுமே சரி செய்ய எத்தணிக்கிறோம் . 

ஆனால் மிகை நோய்களை பொருட்படுத்தாமல் போகின்றோம். தற்போது நாம் எடுக்கக்கூடிய கால்சியம் ,போலிக் ஆசிட் மாத்திரைகள், இரும்பு சத்து மற்றும் மல்டிவிட்டமின் மாத்திரைகள், ப்ரோட்டீன்கள் அமினோ அமிலங்கள் இவை அனைத்தும் நம் உடலுக்குத் தேவையான அளவை விட அதிகமாக  எடுத்துக் கொண்டிருக்கின்றோம். ஏனெனில் இயற்கையானது ஒவ்வொரு பொருளிலும் அவற்றை எளிதாக செரிக்க கூடிய வகையில் பக்குவப்படுத்தி நமக்கு தருகிறது. 

ஆனால் அவற்றை நாம் வெளியில் இருந்து எடுக்கும் பொழுது மிகை நோய்களாக நோய்களை தோற்றுவிக்கிறது. எனவே நமது உணவை வகைப்படுத்தி சரிவிகித உணவை எடுக்கும் பொழுது ஆரோக்கியமாக இருக்கலாம்.சரி எவ்வாறு நாம் உணவை வகைப்படுத்துவது ?முதலில் உடலுக்கு சக்தி தரும் உணவுகள் எவை? என்று பார்ப்போம்.

சக்தி தரும் உணவுகள் உடலின்  பல்வேறு தொழில்களுக்கும், அசைவுகளுக்கும் தேவையான வெப்பத்தை அளிக்கிறது. இதுவே முன் சென்ற தொடரில் கூறியது போல கலோரி என்று நாம் குறிப்பிடுகிறோம்.

உடலின் எல்லா பகுதிகளும் எப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்கின்றது. இருதயம் மற்றும் ஜீரண உறுப்புகள் இவை அனைத்திற்கும் சக்தி மிகவும் தேவை. நாம் இன்னும் பொருள்களில் உள்ள மாவு சத்து, கொழுப்புகள் ,புரதச்சத்துக்கள் இவை அனைத்தும் நமக்கு அதிக சக்தியை அளிக்கின்றது. தானியங்கள் குறிப்பாக தோல் நீக்கப்படாதவை .கிழங்குகள்,எண்ணெய் வித்துக்கள் ,நெய் போன்றவை அதிக சக்தி தரும் உணவுகள். இவற்றில் கம்பு ,சோளம், வரகு, சாமை ,திணை, கேழ்வரகு  இவையும் இவற்றில் அடங்கும் இவை சக்தி தரும் உணவுப் பொருட்கள் இவற்றில் நமது உணவில் அதிகமாக தற்போது சேர்க்கும் உணவுப் பொருள் அரிசி, கோதுமை மற்றும் எண்ணெய் இவற்றை எவ்வாறு சரியாக பயன்படுத்துவது பயன்படுத்தி சக்தியை மற்றும் எனர்ஜியை அதிகப்படுத்தலாம் என்று அடுத்த வாரம் பார்க்கலாம்.

 
டாக்டர் ஃபர்ஜானா பாத்திமா M.D(Acu).

தொகுப்பு :
உங்கள் குறள் யோகி, 
தமிழ்ச் செம்மல், 
டாக்டர் மு.க.அன்வர் பாட்சா.


 


Post a Comment

0 Comments