Ticker

6/recent/ticker-posts

Ad Code



தவறான கதவு திறந்ததால் குழந்தைக் கொரில்லா மரணம்


கனடாவின் பிரபல கல்கேரி (Calgary) விலங்குத் தோட்டத்தில் மனிதத் தவற்றால் இளம் கொரில்லா மாண்டது.

இயாரே (Eyare) என்கிற அந்த இரண்டு வயது கொரில்லாவிற்குப் பயிற்சி அளிப்பதற்காக அதை மற்ற கொரில்லாக்களிடமிருந்து தனிமைப்படுத்த ஊழியர் முயன்றார்.

அப்போது அவர் தவறுதலாக நீரழுத்தக் கதவை இயக்கியதில் கதவு கொரில்லாவின் தலையில் அடித்தது.

தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தால் அது மாண்டதாக CNN தொலைக்காட்சி கூறியது.

இத்தகைய சம்பவங்களைத் தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று விலங்குத் தோட்டம் சொன்னது.

சம்பந்தப்பட்ட ஊழியர் அந்தப் பகுதியில் இருந்து உடனடியாக அகற்றப்பட்டார். 

அவர் விலங்குத் தோட்டத்தில் வேறு வேலைக்கு மாற்றப்படுவார் என்று CNN குறிப்பிட்டது.

seithi



 Ai SONGS

 



Post a Comment

0 Comments