Ticker

6/recent/ticker-posts

தேன் சர்க்கரை நோய் , கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறதா..? வெளியான ஆய்வு தகவல்..!

எந்த வித கலப்படமும் அற்ற தூய தேன் இயற்கையான இனிப்பு சுவை கொண்ட அதிமருந்து எனலாம். காரணம் இதில் கொட்டிக்கிடக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது. குறிப்பாக ஆயுர்வேத மருத்துவத்தின் ஒரு அங்கமாக இருப்பதற்குக் காரணமும் அதன் நன்மைகளால்தான். குறிப்பாக குளிர்கால , மழைக்கால நோய் தொற்று காரணமாக ஏற்படும் சளி , தொண்டை கரகரப்பு, தொண்டை வலி, இருமல் போன்றவற்றிற்கு தேன் தான் சிறந்த ஆதாரம்.

அதில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகள் நோய் தொற்றை எதிர்த்து போராட உதவுகிறது. இப்படி பல நன்மைகளை கொண்டிருக்கும் தூய தேன் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கவும், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் உதவுவதாக தற்போது வெளியாகியுள்ள ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் 1,150 ஆரோக்கியமான பங்கேற்பாளர்களை வைத்து அவர்களுக்கு 18 கட்டுப்பாடு கொண்ட உணவு முறையை பின்பற்றப்பட்டு கண்கானிக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானோருக்கு கார்டியோமெட்டபாலிக் நன்மைகள் கிடைத்தது தெரியவந்தது.

இந்த ஆய்வு நியூட்ரீஷியன் ரிவ்யூஸ் என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் இணை ஆசிரியர் மருத்துவர் தௌசீஃப் அஹமத் கான் பேட்டியளித்ததில் “ "சுமார் 15% தேனை வைத்தே டஜன் கணக்கான அரிய சர்க்கரைகள் தயாரிக்கப்படுகின்றன. உதாரணமாக ஐசோமால்டுலோஸ், கோஜிபியோஸ், ட்ரெஹலோஸ், மெலிசிடோஸ் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் குளுக்கோஸை மேம்படுத்துதல், இன்சுலின் எதிர்ப்பைக் குறைத்தல் போன்ற பல உடலியல் மற்றும் வளர்சிதை மாற்ற நன்மைகளைக் கொண்டுள்ளன. மேலும் ஆரோக்கியமான குடலுடன் ஆரோக்கியமான பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் பங்காற்றுகிறது”

பாலிபினால்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் கரிம அமிலங்கள் போன்ற பல உயிரியல் மூலக்கூறுகள் , ஆண்டிபயாடிக் விளைவு, புற்றுநோய் எதிர்ப்பு விளைவு, உடல் பருமன் எதிர்ப்பு விளைவைக் கொண்ட ஒபெசோஜெனிக் எதிர்ப்பு (anti-obesogenic) உள்ளிட்ட மருந்தியல் பண்புகளையும் கொண்டுள்ளன. மேலும் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்தும் பாதுகாக்கின்றன. மற்றும் வீக்கம் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது." என்று கூறியுள்ளார்.

கூடுதலாக, எந்த உணவையும் அருந்தாமல் காலையில் வெறும் வயிற்றில் இருக்கும்போது தூய தேனை அருந்தினாலும் சர்க்கரை அளவில் நேர்மறையான விளைவை தருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், டாக்டர் தௌசீஃப் அஹ்மத் கான், தேனை அதிகமாகக் குடிக்கக் கூடாது என்று பரிந்துரைக்கிறார். ஏனெனில் எல்லாவற்றிலும் அதிகமானது என்பது உடலுக்கு மோசமானது. அது ஒரு நபரின் ஆரோக்கியத்திலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
news18


 


Post a Comment

0 Comments