இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மயானங்களில் இறந்தவர்களின் உடல்கள் வருவது அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனைகளிலும் நோயாளிகள் நிரம்பி வழிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சீனாவில் கொரோனாவால் 60 சதவீதம் பேர் பாதிக்க வாய்ப்பு உள்ளது என்றும் லட்சக்கணக்கானோர் உயிரிழக்கக் கூடும் என்றும் மூத்த தொற்று நோயியல் நிபுணர் எரிக் பீகல் டிங் தெரிவித்துள்ளார்.
அதன் எதிரொலியாக இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரப்படுத்துமாறு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்பூஷன் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், உலக அளவில் கொரோனா பாதிப்பு இன்னமும் இருக்கிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டும். ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த கொரோனா தடுப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை மாநிலங்கள் மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
asianetnews
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments