Ticker

6/recent/ticker-posts

2022 ஆம் ஆண்டை விட, இந்த ஆண்டு, கடினமாக இருக்கும்... சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

உலகப் பொருளாதாரம், கடந்த 2022 ஆம் ஆண்டை விட, இந்த ஆண்டு, கடினமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

இந்த எச்சரிக்கையை சர்வதேச நாணயநிதியத்தின் தலைவரான கிறிஸ்டலினா ஜோர்ஜீவா விடுத்துள்ளார்.
உக்ரைனில் இடம்பெறும் போர் மற்றும் கடுமையாக உயர்ந்து வரும் வட்டி விகிதங்கள் உள்ளிட்ட விடயங்களினால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்

மேலும் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றினாலும், உக்ரைனில் இடம்பெறும் போரினாலும் ஐரோப்பிய ஒன்றியமும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமட்டுமன்றி, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவின் வளர்ச்சி குறைந்து வருவதாலும், இந்நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அமெரிக்கா மிகவும் உறுதியாக இருப்பதனால் பொருளாதார மந்தநிலையைத் தவிர்க்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பணவீக்கத்தைக் குறைக்க அமெரிக்க மத்திய வங்கி, நீண்ட காலத்திற்கு வட்டி விகிதங்களை இறுக்கமாக வைத்திருக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


 


Post a Comment

0 Comments