காதலே என்னைக் காதலி!

காதலே என்னைக் காதலி!


காதலே என்னைக் காதலி 
காதோரமாக ரகசியம் பேச 
என்னைக் காதலி 

காந்தக் கண்ணாலே 
எனைச் சாய்த்தவனே 
என்னைக் காதலி 

கசக்கிப் போட்ட 
காகிதம் படகாகி 
தத்தளிப்பது போல் 
தத்தளிக்கின்றது
என் மனம்  என்னைக் காதலி.

கரும்பான வாழ்வை 
குறும்பாக அனுபவிப்போம்  
என்னைக் காதலி 

உன்னை நினைத்து 
வரும் பெரும் 
மூச்சும் கரைந்து போச்சு 
என்னைக் காதலி.

உடலும் துரும்பாக 
இளச்சுப் போச்சு 
என்னைக் காதலி.

உன் மணிக்குரலால் 
வார்த்தை ஒன்று 
கூறி  என்னைக் காதலி.

உனக்கும் எனக்கும் 
இடைவெளி  
சிறு தூரம் தான் 
என்னைக் காதலி.

தொட தடை போடுவது
 பஞ்சபூதத்தில் 
ஒன்று தான் என்னைக்  காதலி.

உன் அடந்த தாடியில் 
அடங்கிப் 
போனேன் 
 என்னைக்  காதலி .

நீ கிறுக்கிய 
கவிதையில் மயங்கிப் 
போனேன்  என்னைக் காதலி.

உன் இரும்பு இதயம் 
கண்டு ஏங்கிப் 
போனேன் என்னைக்  காதலி.

அதை திறப்பாய் 
அன்பால் என்று 
நம்வுகிறேன்  என்னைக் காதலி.

ஒன்றை ஒன்று தொட்டு 
விட துடிக்கும் அலை  
போல் தொடர்கின்றேன் 
என்னைக் காதலி.

தொட்டு அணைப்பாய் 
என்று நம்பிக்கை 
உண்டு என்னைக் காதலி 

உள்ளத்தின் 
உணர்வுகளை 
கொட்டி விட்டேன்  கவிதையிலே 
என்னைக்  காதலி.

உன் மேல் கொள்ளைப்
பிரியமடா 
என்னைக் காதலி 

உன் பிடிவாதம்  
தழர்த்தி முறைப்படி 
கரம் பிடித்திட 
என்னைக்  காதலி.

வயது வரம்பு பாராது 
உன்னை நேசித்து 
விட்டேன் என்னைக் காதலி.

தலை நரைத்து தாடி
 சிரைத்து இருந்தாலும்  
என் பாசம்  மாறாது 
என்னைக் காதலி 

கேடிபோல் காட்சி கொடுத்து 
ஞானி போல் 
மாறாமல் என்னைக் காதலி.

காதலே உன்மேல் 
தானடா நீதான் உலகமடா
ஆகையால் 
காதலே என்னைக் காதலி

கவிதைகளால்
 தூது விட்டேன் 
கனவில் சம்மதம் கேட்டேன் 
இன்னும்  ஏன் மௌனம்
 காதலே என்னைக் காதலி. 

ஆர் .எஸ் . கலா



 


Post a Comment

Previous Post Next Post