
மூன்று நாட்களில் மாறக்கூடிய ஒரு புதுமை உணர்ச்சிக்கு காதல் என்று பெயரில்லை. அதன் பெயர் பிராந்தி. காதலென்பது தேவலோக வஸ்து.
பாரதியார்
ஏழைகள் கூட்டத்திலிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள், உயர்ந்தவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளத் தான் பணக்காரர்களின் பணத்தில் பத்தில் ஒன்பது பங்கு செலவாகிறது.
டால்ஸ்டாய்
உயர்ந்த பொருள்களையே புகழாதீர்கள். சமவெளிகளும் மலைகளைப் போல நிலைப்பவை.
பி. எஃப். பெய்லி
நாமே நமக்குச் சொல்ல முடியாததை எவன் நமக்குச் சொல்கிறானோ அவனே விலை மதிக்க முடியாத நண்பனாவான்
எமர்சன்
நடத்தை என்பது ஒரு கண்ணாடி. அதில் ஒவ்வொருவரும் தமது பிம்பத்தையே காட்டுகின்றனர்.
கதே
நாம் இல்லாமல் உண்மையில் இந்த உலகம் இயங்க முடியும். ஆனால் நாம் அப்படிக் கருத வேண்டும்.
லாங் ஃபெல்லோ
மனிதனை எது அடிமையாக்குகிறதோ அது அவன் தகுதியில் பாதியை அழித்து விடுகிறது.
போப்
திகாரத்தை அடிக்கடி பயன்படுத்துவதும், ஆராயாமல் உபயோகிப்பதும் அதிகாரத்திற்கே குழி தோண்டுவது போலாகும். இடைவிடாமல் இடி இடித்து வந்தால் அது ஏதோ அலையின் ஓசை போல், அதில் பயம் தெளிந்து விடும்.
கோல்பெர்ட்
மற்றவர்களது மகிழ்ச்சியைப் பற்றி மக்கள் கற்பனையாக எண்ணிக் கொள்வதே அவர்களது அதிருப்திக்குக் காரணம்.
தாம்சன்
முறை தவறிச் சேர்த்த செல்வம் முட்கம்பிகளுள்ள அம்பு போன்றது. அதை உடலிலிருந்து எடுக்கும் போது பயங்கரமான வேதனை ஏற்படும். அப்படி எடுக்கா விட்டாலோ அது அழிவையே ஏற்படுத்தி விடும்.
ஜெரிமி டெய்லர்
உலகத்தின் சோதனைகளுக்கு உட்படாமலும், அதனிடம் பாடம் கற்காமலும் ஒருவன் நிறைவுள்ள மனிதனாக விளங்க முடியாது.
ஷேக்ஸ்பியர்
ஓர் அபிப்பிராயம் உண்மைக்குப் பொருத்தமானதாக இல்லா விட்டாலும் அது உன்னுடையது என்பதற்காக அதைப் பிடிவாதமாக நீ பற்றிக் கொண்டிருந்தாயானால் உண்மையை விட நீயே மேலானவன் என்று கருதுவதாகும்.
வென்னிஸ்
கவலையோ பயமோ இல்லாமல் வாழ்க்கையை நடத்துவதில் மிகுந்த அழகு இருக்கிறது. நம் அச்சங்களில் பாதி ஆதாரமற்றவை, பாதி நம்பத் தகாதவை.
போவீ
ஒரு சிறந்த கவிஞன் ஒரு சோலையின் மிகச் சிறந்த பயன்களை எல்லாம் அனுபவித்து விடுகிறான். ஆனால் அந்த சோலையின் சொந்தக்காரனோ பழங்கள், மட்டுமே வீட்டுக்குச் சுமந்து செல்கிறான்.
தோரோ
உலகில் நீங்கள் பிறக்கும் போது எதையும் கொண்டு வராமல் வெறும் உடலோடு தானே பிறந்தீர்கள். அதனால் பின்னால் எது கிடைத்தாலும் அதை லாபமென்று கொல்கிற மனப்பான்மையே வேண்டும்.
டாமிஸ்டீல்
பிடிவாதமுள்ள மனிதர்களுக்கு அவர்கள் அடையும் கஷ்ட நஷ்டங்களே ஆசிரியர்கள்.
ஷேக்ஸ்பியர்
மனிதர்கள் நம்மை நிந்திக்கையில் நாம் நம்மையும், அவர்கள் நம்மைப் புகழும் போது நாம் அவர்களையும் சந்தேகிக்க வேண்டும்.
கோல்டன்
அபிப்பிராய வேற்றுமைகளுக்காக நான் ஒரு மனிதனை விட்டு விலக மாட்டேன், அவனுடைய முடிவைக் கண்டு கோபமடையவும் மாட்டேன். ஏனெனில் நானே சில நாட்களுக்குப் பிறகு என் கருத்துகளுக்கு எதிராக முடிவு செய்யவும் கூடும்.
ஸர் தாமஸ் ப்ரௌன்
அதிக வறுமைப்பட்டவரும் அதிகச் செல்வமுடையவரும் நியாயத்தைச் சொன்னால் கேட்க மாட்டார்கள்..
ஃபீல்டிங்
தகுதியற்ற புகழ்ச்சி மறைமுகமான அவதூறாகும்.
போப்
ஒரு மனிதனுடைய பண்பை அவனுடைய அசாதாரணமான முயற்சிகளைக் கொண்டு அளவிட வேண்டாம். அவனுடைய தினசரி நடத்தையைக் கொண்டே பார்க்க வேண்டும்.
பாஸ்கல்
தன் அறியாமையைத் தான் அறியாதிருத்தலே அறியாமையின் துயரம்.
ஆல்காட்
அற்ப மனிதர்களுக்கு அற்ப விஷயங்கள் பெரிதானவை.
கோல்டுஸ்மித்
ஆடம்பரத்தின் மென்மையான மெத்தையில் தான் பெரும்பாலான சாம்ராஜ்ஜியங்கள் மாய்ந்தொழிகின்றன.
யங்
உலகில் நமக்குள்ள ஒரே வேலி அதை நன்றாகப் புரிந்து கொள்ளல் மட்டுமே.
லாக்
தொகுப்பு;நிர்மலா மொரீஷியஸ்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments