
‘டெவில் கிராப்’ என அழைக்கப்படும் விஷ நண்டை வீடியோவிற்காக சாப்பிட்ட 51 வயது பெண் சமூக ஊடகர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
எம்மா அமித் என்ற அந்த பெண், பிப்ரவரி 4 அன்று தனது வீட்டருகே உள்ள மாங்க்ரோவ் காடில் நண்பருடன் கடல் உயிரினங்களை சேகரித்த வீடியோவை பதிவு செய்தார். வைரலான அந்தக் காணொளியில், அவர் நண்டை சாப்பிடுவது பதிவாகியுள்ளது.
அடுத்த நாள் கடுமையாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவருக்கு மயக்கமும் வலிப்பும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது உதடுகள் நீல நிறமாக மாறி, நிலைமை மோசமடைந்த நிலையில், மருத்துவர்களின் முயற்சிகளையும் மீறி பிப்ரவரி 6 அன்று அவர் உயிரிழந்தார்.
வீட்டில் விசாரணை நடத்திய அதிகாரிகள், குப்பைத்தொட்டியில் நண்டு ஓடுகள் இருப்பதை கண்டறிந்தனர். இந்தோ-பசிபிக் கடற்பரப்பில் காணப்படும் இந்த நண்டு, சாக்சிடாக்சின், டெட்ரோடோடாக்சின் போன்ற ஆபத்தான நஞ்சுகளை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த பகுதியில் வாழும் மக்கள் நஞ்சு கடல் உயிரினங்களைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments