Ticker

6/recent/ticker-posts

Ad Code



“துபாய் ஹோட்டலில் நடந்தது எனக்கு தெரியும்.. பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” : அண்ணாமலையை சாடிய காயத்ரி!

தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் அரங்கேற்றப்படும் மட்டமான அரசியலை சகித்துக்கொள்ள முடியாத நிலை இன்னுமும் அதிகரித்திருக்கிறது. ஊரே நாறும் அளவிற்கு பா.ஜ.கவின் உட்கட்சி பூசல் வெளியே வந்துள்ளது. பா.ஜ.கவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் பல மூத்த நிர்வாகிகள் மீதான பாலியல் புகார்களும் கொஞ்ச நஞ்சமில்லை குறைந்தபாடும் இல்லை.

முன்னதாக கே.டி.ராகவன் தொடங்கி, கடைசியாக கட்சியில் இணைந்து, பின்னர் வெளியேறிய திருச்சி சூர்யா வரை பாஜக முக்கிய புள்ளிகள் மீது சொந்தக்கட்சி பெண் நிர்வாகிகளே புகார் அளித்துள்ள செய்தியெல்லாம் ஊடங்களில் வெளிவந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு பா.ஜ.கவிற்கு புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணாமலை பொறுப்பிற்குவந்த நாள் முதல் ரவுடிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் என சிலரை கட்சியில் இணைத்து பொறுப்பு வழங்கினார். அப்படி பொறுப்பு வழங்கப்பட்ட நடிகை காய்த்ரி ரகுராம் மீது சமீபத்தில் அண்ணாமலை நடவடிக்கை எடுத்து கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.

நியாயம் கேட்டவரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு, அநியாயம் செய்வதற்களை அண்ணாமலை உடன் வைத்திருப்பதாகவும் பொங்கினார் காய்த்ரி ரகுராம். சமீபத்தில் திருச்சி சூர்யா மற்றும் பா.ஜ.க பெண் நிர்வாகி டெய்ஸி இடையே நடந்த மோதலில் கூட பா.ஜ.கவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சனையில் அண்ணாமலை உடனே தலையிடவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். ஆனால் இவரிம் கோரிக்கையை செவிசாய்க்காத அண்ணாமலை இரண்டு பேரையும் வைத்து அக்கா - தம்பி நாடகத்தை அரங்கேற்றினார்.

இதனால் கொதிப்பின் உச்சத்தில் இருந்த நடிகை காயத்ரி ரகுராம் அண்ணாமலையும் மதனும் பா.ஜ.க.வில் இணைந்த பிறகுதான் பா.ஜ.க.வில் வீடியோ ஆடியோ கலாச்சாரம் வந்தது என்றும் மதன் மீது ஏன் புகார் இல்லை? வீடியோ வெளியிட அண்ணாமலை ஏன் ஒப்புக்கொண்டார்? என கேள்வி எழுப்பினர்.

இதனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏன் இன்னும் வீடியோக்கள் ஆடியோவை அப்படியே வைத்திருக்க வேண்டும், ஏன் அழிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினார். அதுமட்டுமல்லாது, பா.ஜ.கவில் புதிதாக இனைந்த அலிஷா அப்துல்லா நேற்று முன்தினம், திருச்சி சூர்யா தன்னை ஆபாசமாக பேசியதாக பேட்டி அளித்திருந்தார்.

இதனையடுத்து இதுதொடர்பாக பேசிய காய்த்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில், “அண்ணாமலையின் வார் ரூம் தாக்குதல்காரர்களின் வியூகம் பெண்கள் குறித்து அவதூறு பரப்பிகிறார்கள். அலிஷா அப்துல்லா பொது வெளியில் தன்னுடைய பிரச்சனையை பேச அனுமதி உள்ளது என்றால் அது எனக்கு ஏன் மறுக்கப்படுகிறது?

துபாய் ஹோட்டலில் 150 பேர் முன்னிலையில் அண்ணாமலை என்னைப் பற்றி அவதூறாக பேசியிருந்தார். அவர் தற்போது சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்துள்ளார், எனவே உண்மையைதான் சொல்லவேண்டும். எந்த பெண்ணையும் அவமதிக்கும் செயலை நான் அனுமதிக்க மாட்டேன். அலிஷா அப்துல்லாவை கட்சி அலுவலத்தில் பேச வைத்துள்ளீர்கள். ஆனால் அந்த சம உரிமை எனக்கு ஏன் இல்லை. என்னிடம் ஆதாரம் உள்ளது” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
kalaignarseithigal


 


Post a Comment

0 Comments