Ticker

6/recent/ticker-posts

'இஸ்லாமிய விவாக விவாகரத்து சட்ட மூலம்' " காக்கப்படுமா அல்லது நீக்கப்படுமா " ?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு...

கண்ணியத்துக்கும் , கௌரவத்துக்குமுறிய எமது இலங்கை திருநாட்டில் அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்து  பற்பல தஃவா பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்  எமது மூத்த உலமாக்களே...!

தங்களிடம்  "அன்பு மிகு வேண்டுகோள் "
தற்போது காலத்தின் தேவையாக எம் சமூகத்திற்கும் பிற சமூகத்தவர்களின் அதிகார வர்க்கத்திற்கு  மத்தியிலும் ஊசலாடிக்  கொண்டிருக்கும்  எமது மார்க்கம் மற்றும்  சமூக பிரச்சினைகள் சம்பந்தமாக தாங்கள் அனைவருடைய அவதானத்திற்கும் எனது  கருத்தை முன் வைக்கின்றேன்.

மூத்த உலமாக்களும் , அறிஞர் பெருமக்களும் , சமூக உணர்வுள்ள அரசியல் தலைவர்களும் , பெரும் அர்ப்பணிப்புடனும் , தியாகத்துடனும்  உருவாக்கி விட்டுச் சென்ற.  
 " இஸ்லாமிய தனியார் சட்டம் " என்பது பல தரப்பட்ட இனவாதிகளின் சதியாலும்  எம் சமூகத்தைச் சார்ந்த சிலருடைய வேற்றுமையாலும் தல்லாடி  சின்னாபின்னமாகி விடும் ஓர் அவல நிலை தற்போது உருவாகியுள்ளது.(அல்லாஹ் பாதுகாப்பானாக ).

அதிலும் தற்போது பெரும் பிரச்சினையாக உருவெடுத்து  " காக்கப்படுமா அல்லது நீக்கப்படுமா " ? எனும் கேள்விக் குறியுடன் சமூகத்தில் பேசப்படும் தலைப்பாக உள்ள பிரச்சினைதான் " இஸ்லாமிய விவாக விவாகரத்து சட்ட மூலம் ".

இது சம்பந்தமான பேச்சுவார்த்தையில்  அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் கெளரவத்துக்குறிய  உலமாக்களும் , கெளரவ சட்டத்தரணிகளும் , புத்திஜீவிகளும் பலமை பாதுகாக்கப்படடு ஓரிரு குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள், நிபந்தனைகள் சகிதம் முன்வைக்கப்பட  போதிலும்,இதற்கு மாறுபட்ட கருத்துக்களை முன்வைப்பவர்கள்  எமது சமூகத்தை சார்ந்தவர்கள் என்பது சிந்திக்கவேண்டிய ஒரு விடயம்.

இப்படியான கருத்து வேறுபாடுகள் தொடருமானால் எமது எதிர்கால சந்ததிகளின் நிலை என்னவாகும்?.அல்லஹ்வினால் அருளப்பட்ட ஷாரியா சட்டங்களில் கைவைப்பது மிகவும் பாரதூரமான ஒரு செயல்.ஷாரியா சட்டங்கள் எந்த நாட்டிற்கும் எந்த காலத்திற்கும் ஏற்றமுறையிலேயே வகுக்கப்பட்டுள்ளது.அதை மாற்றவோ விமர்சனம் செய்யவோ எவருக்கும் அதிகாரம் இல்லை என்பதை நாம் அறிவோம் .

இப்படி மார்க்க விடயங்களில் கைவைப்பதை நாம் ஆரம்பத்திலேயே தடுக்கவேண்டும்.இல்லையென்றால் குர்ஆனில் கைவைப்பார்கள்.முஸ்லிம்களின் வாழ்க்கை முறையில் கைவைப்பார்கள் .இப்படியாக ஒவ்வொரு விடயங்களிலும் தலையிடும் நிலை ஏற்படும் . 

ஆகவே இச்சந்தர்ப்பத்தில் எமது நாட்டின் கெளரவத்துக்குரிய மூத்த உலமாக்கள் என்ற அடிப்படையிலும் எமது சமுதாயத்தின் தீனுடைய காவலாளர்கள்  என்ற அடிப்படையிலும் தாங்கள் அனைவரும் முன் வந்து இப்பிரச்சினைக்கான தாங்களின் தீர்வுகளை முன் வைப்பது மிகவும் அவசியமானதொன்று .

அல்லாஹ்  , ரஸூலின் கட்டலைக்கினங்க  எமது மார்கத்தையும்  சமூகத்தையும் , இந்த நாட்டில் எமது முன்னோர்கள்  பாதுகாத்து வைத்துள்ள மார்க்க சுகந்திர கட்டமைப்புக்களையும் பாதுகாத்து எமது எதிர்கால சந்ததிகள் நிம்மதியாக  ,  சந்தோஷமாக வாழ வழிவகைக்க உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

அல்லாஹ் தஆலா தாங்கள் அனைவருக்கும் நீண்ட ஆயூலையும் ,  சரீர சுகத்தையும் தந்தருள் புரிவானாக..ஆமீன்

கல்ஹின்னை M.H.M நியாஸ் 
(முன்னால் ஹம்பான்தொட்டை உப்புத் தொழிற்சாலையின் பணிப்பாளர்
மற்றும் பணிப்பாளர் watersedge பத்தரமுல்ல.சமுர்த்தி அமைச்சு.
தொடர்புகளுக்கு; ;0777814108


 


Post a Comment

0 Comments