Ticker

6/recent/ticker-posts

தமிழகத்தில் இரண்டு மகள்களை காவிரி ஆற்றில் வீசி கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை

தமிழகத்தில் இரண்டு மகள்களை காவிரி ஆற்றில் வீசி கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் யுவராஜ் - பான்விழி தம்பதியினருக்கு 7 வயதில் நிதிக்ஷா என்ற மகளும், 5 வயதில் அக்சரா என்ற மகளும் இருந்தனர்.  நிதிஷாவுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதற்காக அவளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மூன்று தினங்களுக்கு முன்பு 5 வயது சிறுமி அக்ஷராவுக்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கும் நீரிழிவு நோய் இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாகவே யுவராஜ் தம்பதியினர் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகி தவித்து வந்த நிலையில், இரண்டு குழந்தைகளும் நீரிழிவி நோயால் சிரமப்படுவதை தாங்கிக்கொள்ள முடியாமல், கடிதம் எழுதி வைத்துவிட்டு, மகள்களுக்கு புத்தாடை அணிவித்து வீட்டை விட்டு வெளியேறிய யுவராஜ் தம்பதியினர், தமிழக கர்நாடக எல்லையில் உள்ள காவிரி ஆற்றில் 2 மகள்களையும் தூக்கி வீசி கொலை செய்ததோடு, தாங்களும் குதித்து விபரீதமாக உயிரை மாய்த்துக்கொண்டது தெரியவந்தது.

ஆற்றில் 2 பெரியவர்கள் மற்றும் 2 சிறுமிகள் என 4 பேரது சடலங்கள் மிதப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

இதனிடையில் நீரிழிவு நோய் எந்த வயதினருக்கு வந்தாலும் பயப்படாமல் முறையாக மருந்துகள் எடுத்துக்கொண்டால் பல ஆண்டுகள் வாழ முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.




 


Post a Comment

0 Comments