Ticker

6/recent/ticker-posts

Ad Code



கோவையில் நாம் மனிதர் கழகத்தின் பொன்விழா ஆண்டு குறித்த கலந்தாய்வுக் கூட்டம்


நாம் மனிதர் கழகத்தின் பொன் விழாவினை சீரோடும், சிறப்போடும் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவை தமிழ்நாடு ஓட்டல் அரங்கில் 17-12-2022 அன்று மாலை 5-00 மணிக்கு நிறுவனர் /பொதுச் செயலாளர்., உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் திருமிகு A.P.வீரப்பனார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கழகப் பெரும் தலைவர் டாக்டர் பாபுஜி காந்தி அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அப்போது அவர், நாம் மனிதர் கழகம் உலகம் முழுவதும் அனைவருக்கும் தெரியும் வண்ணம் செய்ய வேண்டும் என்றும், நாம் மனிதர் கழகம் அரசியல் கலப்பின்றி, ஜாதி, மதங்கள் கடந்து மனித நேயம் மிளிரும் வண்ணம் செயல்படும் ஓர் அமைப்பு. இதன் செயல்பாடுகள் உலகறியச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

நா.ம.க நிறுவனர் அவர்கள் தம் , தலைமை உரையில்,
தமது ஆரம்ப கால வாழ்வு பற்றியும், நீதிமன்றத்தில் தம்முடைய வாதமதி  நுட்பத்தினையும், நாம் மனிதர் கழகம் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாகப் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக,  வேட்டை மின்னிதழின் ஆசிரியர் அவர்கள் இணைய வழியில் பங்கேற்று வாழ்த்துரைத்தார்.

அவருக்கு கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் நன்றி கூறினர். 


தொடர்ந்து  ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நாம் மக்கள் கழக நிர்வாகிகள் திருக்குறள் முரசு முனைவர் மு.க. அன்வர் பாட்ஷா அவர்கள், கலைமாமணி மு.பெ. இராமலிங்கம் அவர்கள், டாக்டர் ஜெ,மாணிக்கவாசகம்  அவர்கள், மற்றும் நெகமம் வேணுகோபால், கோவை லதாமங்கை, மதுரை முத்துராஜா, மதுரை சேது லட்சுமி, பட்டிவீரன்பட்டி கோபிச்செல்வி, பெரியநாயக்கன் பாளையம் சுலோச்சனா, பாப்பம்பட்டி திருமதி சாந்தி, மதுரை இராம கிருஷ்ணன், கோவை ஜெயா நாச்சியார், எம்மேகவுண்டன் பாளையம் சக்திவேல், பீளமேடு திருமதி பொன்னம்மாள், மணியக்காரன் பாளையம் சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் கருத்தைப் பதிவு செய்து சிறப்பித்தனர்.
கலந்தாய்வு கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

நிறைவாக நன்றி நவிலலுடன் நா.ம.க பொன்விழா காணும் கலந்தாய்வு கூட்டம் பங்கேற்ற அனைவருக்கும் விருந்துணவுடன் இனிதே நிறைவு பெற்றது



 


Post a Comment

1 Comments

  1. அருமையான பதிவு... மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா... நெஞ்சார்ந்த நன்றி...

    ReplyDelete