கத்தார் என்பது மேற்காசியாவிலுள்ள ஒரு சிறிய நாடாகும். பிரித்தானிய இந்நாட்டை 1916ம் ஆண்டிலிருந்து ஆண்டு வந்தது. 1971ல் அதன் பிடியிலிருந்து விடுதலை பெறும்வரை, அபிவிருத்தி குன்றிய ஒரு குட்டி நாடாகவே இது இருந்து வந்தது.
1995ம் ஆண்டுக்குப் பின்னர் தற்போதைய சிற்றரசர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியின் வழிகாட்டலில் கத்தார் எழுச்சி பெற ஆரம்பித்தது.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு 30 லட்சம் மக்களையும், 12,000 கிலோ மீட்டருக்கும் குறைவான குடியிருப்புக்கு ஒவ்வாத நிலத்தையும் கொண்டிருந்த இந்நாடு, மீனவர்கள், முத்துக்குளிப்பாளர்களையே குடியிருப்பாளர்களாகக் கொண்டிருந்தது. இவர்களில் பெரும்பாலானோர் அரேபியாவின் பரந்த பாலைவனங் களிலிருந்து நாடோடிகளாக வந்து, இங்கு குடியேறியோர்களாவர்.
காலம் செல்ல, அடிப்படையில் சிறிய நாடாக இருந்தாலும், உலக அளவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை இந்நாடு செலுத்தத் தொடங்கியபோது, தீவிரவாதத்துக்கு ஆதரவளிப்பதாகவும், அண்டை நாடுகளின் உள்நாட்டுச் செயற்பாடுகளில் தலையிடுவதாகவும் குற்றம்சாட்டி, சில நாடுகள் தமது உறவுகளைத் துண்டித்துக் கொள்ள முற்பட்டன!
தற்போது கத்தார் உலகின் மூன்றாவது பெரிய இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளம் கொண்ட நாடாகத் திகழ்கின்றது. இதன் அமோக வளர்ச்சியும், தைரியமும் 2022-உலகக்கிண்ணக் காற்பந்தாட்டப் போட்டியை, முற்றிலும் இஸ்லாமிய விழுமியங்களுக்குள் - பிரசாரப் பின்னணியை இலக்காகக் கொண்டு நடாத்தும் துணிச்சலைக் கொடுத்துள்ளது. அதே நேரம் காற்பந்துப் போட்டியை நடாத்தும் முதல் அரபு நாடு என்பதில் இந்நாடு பெருமிதமும் அடைகின்றது!
பலநூறு மில்லியன் டாலர் பணத்தைச் செலவிட்டு உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியைத் தனது நாட்டில் நடாத்துவதன் மூலமும், உலகக் கிண்ணம் வெல்லப் போகும் அணிக்கான வெற்றிக் கிண்ணத்தைத் தனது சொந்த மண்ணிலிருந்து கொடுப்பதில், இந்நாடு உவகை கொள்கின்றது!
அது மட்டுமல்லாது, போட்டி நடக்கும் காலத்தைத் தனது நாட்டின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்றவாறு முடிவு செய்து கொண்டதுடன், போட்டியின் இறுதி நாள் நிகழ்வையும் தனது நாட்டின் தேசிய தினத்தன்றே அமைத்துக் கொண்டது!
எல்லாவற்றையும் விட, உலக விளையாட்டு லோலிகளைத் தனது நாட்டிற்கு வரவழைத்து, அரபு-இஸ்லாமிய கலாச்சாரத்தை நேரடியாக அவர்களுக்குப் புரிய வைத்தது! இஸ்லாமியர்கள் வாழும் அரபுலகின் எந்த நாட்டிலிருந்தும், அனைத்து மக்களும் வந்து சேரும் வாய்ப்பு இல்லாமல் இருந்த நிலையில், அதற்கான வாய்ப்புக்களையும் பெற்றுத்தந்தது.
இஸ்லாத்தைப் பற்றிய விழிப்புணர்வை மேற்குலகம் அறிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து, போட்டி நிகழ்வுகளின்போதும் தமது கலாச்சாரத்தையும், கொள்கைகளையும் வெளியுலகுக்குக் காட்டியது!
போட்டியின் ஆரம்ப நிகழ்வின்போது, 'ஞானிம் அல்மிஃப்தாஹ்' என்ற மாற்றுத்திறனாளி இளைஞனின் மூலமாக அல்குர்ஆன் வசனத்தை ஓதச்செய்து, உலகெங்கும் இந்நிகழ்வை நேரலை செய்ததன் மூலம் 250 கோடிக்கும் அதிகமான மக்களிடம் இஸ்லாத்தின் கொள்கையை, அதன் நெறிமுறைகளைக் கண்டுகொள்வதற்கான பிரயத்தனங்களைச் செய்ததுடன், உலகின் பல்வேறு மொழி பேசும் இஸ்லாமியப் பிரசாரகர்களைத் தமது நாட்டுக்கு வரவழைத்து, 200க்கும் அதிகமான பிரசாரக் கூடங்களை அமைத்து, அங்கிருந்து இஸ்லாத்தைப் பற்றிய தெளிவான அறிமுகப்படுத்தையும், விளக்கங்களையும் உலக மக்கள் பெற்றுக்கொல்வதற்கு வழி அமைத்தது.
பொது இடங்களில் மது அருந்துதல், அரைகுறை ஆடைக்களுடன் ஆண்,பெண் வித்தியாசமின்றி ஆடிப்பாடுதல், ஓரினச் சேர்க்கை கலாச்சாரத்தை ஊக்குவித்தல் போன்ற ஒழுக்கக்கேடான அனைத்து செயல்பாடுகளையும் சட்டத்தின் மூலமாகத் தடை செய்து, இஸ்லாமிய நெறிமுறையிலான மனித குல ஒழுக்க மாண்புகள் எது என்பதை உலக மக்களுக்குப் புரிய வைப்பத்தற்கு இந்நிகழ்வை, கத்தார் என்ற குட்டி அரபு-இஸ்லாமிய நாடு பயன்படுத்திக் கொண்டதன் மூலம், தனது இலக்கில் வெற்றி கண்டுள்ளது!
அல்ஹம்துலில்லாஹ்; எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!
- செம்மைத்துளியான்.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments