Ticker

6/recent/ticker-posts

Ad Code



விழுவதிலும் தவறில்லை... அழுவதிலும் தவறில்லை!


என்னுயிரே நீயும்

கலங்குவதை நிறுத்திடு
கண்ணீரைத் துடைத்திடு
என்னருகே அமர்ந்திடு

விழுவதிலும் தவறில்லை
அழுவதிலும் தவறில்லை 
இரண்டிலும்  இருந்து
மெதுவாக மீண்டிடு

எதனால் எங்கு
தவறினோமென சிந்தித்திடு
தவறினைத் திருத்தி
வெற்றியைக் கைவசமாக்கிடு

விழிகள் கொட்டிய
துளிகளை உரமாக்கிடு
இறந்து கொண்டிருக்கும்
நம்பிக்கையை வளர்த்திடு

அழுமூஞ்சி என்னும்
சொற்றொடரை மாற்றிடு
ஏளனமாக நோக்கியவர்
முன்னிலே நிமிர்ந்திடு

கலா


 


Post a Comment

0 Comments