
பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது.
கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும். உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் விளையாடி வருகின்றன.
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் நேற்று முன்தினம் இரவு அல்துமாமா மைதானத்தில் கால் இறுதி ஆட்டத்தில் மொராக்கோ - போர்ச்சுகல் அணிகள் நேருக்கு நேர் மோதின.
இப்போட்டியில் போர்ச்சுக்கல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொராக்கோ அணி அரையிறுதிக்கு முன்னேறிச் சென்றது. இத்தோல்வியால் கிறிஸ்டியானோ ரொனால்டோ மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார்.
இந்நிலையில், என் கனவு முடிவுக்கு வந்ததாக கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அந்த பதிவில்,
போர்ச்சுக்கலுக்கு கோப்பையை வென்று கொடுப்பதே எனது வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியக் கனவாகும். இந்த கனவுக்காக நான் கடுமையாக போராடினேன். துரதிஷ்டவசமாக என்னுடைய கனவு நேற்று முடிவுக்கு வந்தது. போர்ச்சுகல் மீதான எனது அர்ப்பணிப்பு ஒரு கணமும் மாறவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.
16 ஆண்டுகளுக்கும் மேலாக உலகக் கோப்பையில் நான் அடித்த 5 ஆட்டங்களில், எப்போதும் சிறந்த வீரர்களின் பக்கத்திலும், மில்லியன் கணக்கான போர்ச்சுகீசியர்களின் ஆதரவிலும், நான் எனது முழுமையான பங்களிப்பை கொடுத்தேன்.
போர்ச்சுகலுக்கு எனது அர்ப்பணிப்பு ஒரு கணமும் மாறவில்லை. எப்போதும் அனைவரின் நோக்கத்திற்காகவும் போராடும் ஒருவனாக இருக்கிறேன். என் சக வீரர்கள் மற்றும் என் நாட்டுக்காக நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். இப்போதைக்கு அதிகம் பேச விரும்பவில்லை.
ஒரு நல்ல ஆலோசகராக இருந்து ஒவ்வொருவரும் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க அனுமதிக்க வேண்டிய நேரம் இது.. நன்றி போர்ச்சுகல்" என்று ரொனால்டோ உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
The scene of Cristiano Ronaldo walking off the field and breaking down to tears after he’s inside is heartbreaking.
— 🕊️ (@erlingtxt) December 11, 2022
pic.twitter.com/2HVFjvCaJ9
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments