
குரோஷியா என்று அழைக்கப்படும் இந்த நாடு, மத்திய ஐரோப்பாவும் மத்தியதரைக் கடல்பகுதியும், பால்கனும் கூடுமிடத்தில் அமைந்துள்ள சிறிய நாடாகும்.
91 வீதமான கிறிஸ்தவர்கள் வாழும் இந்நாட்டில் 1.5 வீதம் முஸ்லிம்களும் வாழ்கின்றனர். ஏனையோர் எம்மதத்தையும் பின்பற்றாதோராவர்.
குரோஷியாவின் தலைநகரம் "சாகிரேப்" ஆகும். இதன் வடக்கே சிலோவேனியாவும்,ஹங்கேரியும் உள்ளன.கிழக்கே சேர்பியா
உள்ளது. தெற்கிலும் மேற்கிலும், வடகிழக்கிலும், தென்கிழக்கிலும் போஸ்னியா, ஹெர்ட்சேகோவினா உள்ளன. ஏட்ரியாட்டிக் கடல் மேற்கிலும், சற்று தள்ளி தெற்கே மாண்ட்டெனெக்ரோவும் உள்ளது.
குரோஷியா 1991ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்துள்ளது.21,851 சதுர மைல் பரப்பளவு கொண்ட
இந்நாட்டில், நாற்பது இலட்சத்துக்கும் அதிகமானோர் வாழ்கின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த பிரேசில் அணிக்கு எதிரான காலிறுதியாட்டத்தில், குரோஷியா அணி பெனால்டி ஷூட்டவுட்டில் 4:2 கோல் கணக்கில் வெற்றிபெற்றது!

பிரேசில் அணிக்குத் தான் மறுபடியும் விளையாடுவேன் என்பதைத் தன்னால் உத்தரவாதம் அளித்துக் கூற முடியாது என்று, உலகக்கிண்ணப் போட்டியின் காலிறுதிச் சுற்றாட்டத்தின்போது, பெனால்டிகளில் குரோவேஷியாவிடம் பிரேசில் தோல்வி கண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நெய்மார் கூறியுள்ளார்.
'அனைத்துலகக் காற்பந்துப் போட்டிகளிலிருந்து தாம் ஒதுங்கிக்கொள்ளக்கூடும்' என்றும்,'தேசிய அணியில் என் கதவுகளை நான் மூடிக்கொள்ளவில்லை. என்றாலும், நான் அணிக்குத் திரும்புவேன் என்று என்னால் உறுதியுடன் கூற முடியாது; எனக்கும் தேசிய அணிக்கும் எது சரி என்பது பற்றி யோசிக்க வேண்டும்' என்றும் உணர்ச்சி பொங்க அவர் கூறியுள்ளார்.
குரோஷியாவுடனான ஆட்டத்தின் அதிகப்படி நேரத்தில்தான் நெய்மார் கோல் போட்டார். ஆனால், ஆட்டம் முடிவடைய ஒரு சில நிமிடங்களே இருந்த நிலையில், குரோஷியா தரப்பில் புருனோ பெட்கோவிச் கோல் போட்டதால் ஆட்டம் சமநிலை கண்டதும், பெனால்டி ஷூட்டவுட் அறிவிக்கப்பட்டது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் இதே காலிறுதிச்சுற்றில் பெல்ஜியம், பிரேசிலை வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது!

இந்நிலையில், குரோஷியா அணி எதிர்வரும் டிசம்பர் 13ம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அரையிறுதியாட்டத்தில் லியோனல் மெஸ்ஸியின் ஆர்ஜென்டினா அணியை எதிர்கொள்ளவுள்ளது!
செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments