Ticker

6/recent/ticker-posts

Ad Code



விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள காதலனுக்கு ஐஸ் போதைப்பொருளை எடுத்துச்சென்ற மாணவி

தும்பறை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள காதலனை பார்ப்பதற்காக ஐஸ் போதைப்பொருளை எடுத்துச்சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கைதாகியுள்ளார்.

இந்நிலையில், குறித்த மாணவி பல்லேகல காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 20 வயதுடைய குறித்த சந்தேக நபரின் சகோதரியினால் போதைப்பொருள் அடங்கிய குறித்த பொதியை விளக்கமறியலில் உள்ள தனது சகோதரனிடம் ஒப்படைக்குமாறு குறித்த மாணவியிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறைச்சாலை அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, பொதியில் இருந்த காற்சட்டையில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் அடங்கிய இரண்டு சிறிய பைக்கற்றுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது கைது செய்யப்பட்ட மாணவிக்கு போதைப்பொருள் அடங்கிய பொதியை வழங்கிய பெண்ணை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பல்லேகல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  



 


Post a Comment

0 Comments