உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைத்தால் மாபெரும் போராட்டம்...எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை!

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைத்தால் மாபெரும் போராட்டம்...எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை!

அரசாங்கமும் தேர்தல்கள் ஆணைக்குழுவும் சதித்திட்டங்களின் ஊடாக உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியில் ஈடுபட்டால், அதற்கு எதிராக உள்ளூரிலும் சர்வதேச அளவிலும் பாரிய போராட்டத்தை முன்னெடுக்க ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜனதா விமுக்தி பெரமுன தீர்மானித்துள்ளன.

கடந்த சில நாட்களாக இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் பல சுற்று கலந்துரையாடல்களை நடத்தியதுடன், கடந்த கலந்துரையாடலில் சர்வதேச ரீதியில் இதற்கு எதிராக அழுத்தம் கொடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தி நாட்டிற்குள் உள்ள பிரச்சினைகளை நாட்டிற்கு வெளியே கொண்டு செல்லவில்லை எனவும், எனினும் ஜனநாயகம் தொடர்பில் பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளமையினால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தவிர தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கமும் தேர்தல்கள் ஆணைக்குழுவும் நடவடிக்கை எடுத்தால் பெருந்தொகையான மக்களை கொழும்புக்கு வரவழைத்து அதற்கு எதிராக போராட்டங்களை நடத்தவும் ஜே.வி.பி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


 


Post a Comment

Previous Post Next Post