காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இன்னும் 4 போட்டிகள் எஞ்சியிருக்கின்றன. அந்த 4 போட்டிகளிலிருந்து 4 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். காலிறுதியில் அர்ஜெண்டினா - நெதர்லாந்து அணிகளும், இங்கிலாந்து - ஃபிரான்ஸ் அணிகளும் மோதுகின்றன.
காலிறுதிக்கு முந்தைய சுற்றின் இன்றைய போட்டியில் ஜப்பான் - குரோஷியா அணிகள் மோதின. இந்த போட்டியின் 43வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் டைஸன் மேடா கோல் அடித்தார். 55வது நிமிடத்தில் இவான் பெரிசிக் கோல் அடிக்க, அதன்பின்னர் இரு அணிகளும் கடுமையாக போராடியும் ஆட்டம் முடியும் வரை இருஅணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.
இதையடுத்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் இரு அணிகளால் கோல் அடிக்க முடியவில்லை. அதனால் மீண்டும் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. மொத்தமாக 120 நிமிடம் ஆட்டம் முடிந்த பின், பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இரு அணிகளுக்கும் தலா 5 பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது. அதில் முதல் 4 வாய்ப்பில் ஜப்பான் ஒரேயொரு கோல் மட்டுமே அடிக்க, குரோஷியா 3 கோல் அடித்து அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றது. தொடரை விட்டு வெளியேறியது ஜப்பான்.
asianetnews
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments