ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. வந்து விட்டது ஜோம்பி வைரஸ்: மனித குலத்துக்கு பேராபத்தா?

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. வந்து விட்டது ஜோம்பி வைரஸ்: மனித குலத்துக்கு பேராபத்தா?

ரஷ்யாவில் 48,500 ஆண்டுகள் பழமையான ஜோம்பி வைரஸ் கண்டுபிடுக்கப்பட்டுள்ளது உலக நாடுகளைப் பீதியடைய வைத்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து தற்போதுதான் உலகமே மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. வழக்கம்போல் பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியே வந்து நிம்மதி பெருமூச்சுவிட்டு வருகின்றனர். இந்நிலையில் ரஷ்யாவில் 48,500 ஆண்டுகளுக்குப் பழமையான ஜோம்பி வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மீண்டும் உலக நாடுகளைப் பீதியடைய வைத்துள்ளது. இப்போதுதான் கொரோனாவே முடிந்தது இதற்குள் ஜோம்பி வைரஸா என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சைபீரியா பகுதியில் உள்ள பெர்மாஃப்ரோஸ்டி என்ற பனி பிரதேச பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் இருந்துதான் ஜாம்பி வைரஸை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் ஜாம்பி வைரஸ் உடன் சேர்த்து 13 புதிய வைரஸ்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒன்றுதான் 48,500 ஆண்டுகளுக்கு முந்தைய ஜாம்பி வைரஸாகும். இவை ஐந்து வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவை என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக பல ஆயிரம் ஆண்டுகளாக பணியில் உறைந்திருந்த வைரஸ்கள் தற்போது பணிகள் உருகி வருவதால் இதுபோன்ற வைரஸ்கள் வெளிப்படுகின்றன என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த தொற்று மனிதர்களைத் தாக்கும் ஆபத்து குறைவாக இருந்தாலும் எதிர்காலத்தில் கொரோனா தொற்று போன்று பொதுவான தொற்றாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகன் கனித்துள்ளனர். பல ஆண்டுகளாக செயலற்று இருக்கும் வைரஸ்களைதான் ஜோம்பி வைரஸ் என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.

இந்த ஜாம்பி வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியானதை அடுத்து இணைய வாசிகள் பலரும் ஜாம்பி வைரஸ் என்ற பெயரில் வெளியான படங்களைக் குறிப்பிட்டு இனி இப்படிதான் மனித வாழ்க்கையா என பதிவிட்டு வருகின்றனர்.

kalaignarseithigal



 


Post a Comment

Previous Post Next Post