வித்தியா முதல் யூசுப் வரை தூக்கி எறியப்பட்ட யூசுபின் மரணம்- நடந்தது என்ன? நடக்க வேண்டியது என்ன?

வித்தியா முதல் யூசுப் வரை தூக்கி எறியப்பட்ட யூசுபின் மரணம்- நடந்தது என்ன? நடக்க வேண்டியது என்ன?


கடந்த 25.11 அன்று வெள்ளிக்கிழமை 
மதியம் ஒரு வேலையின் நிமித்தம் பொரல்லையில் உள்ள சிறுவர் வைத்திய சாலைக்குச் சென்றிருந்தேன். 

அப்போது இரண்டு முச்சக்கர வண்டிகளில் சிலர் கூக்குரல் இட்டவர்கலாகவும், அழுகையும் கண்ணீருமாகவும் சிலர் வண்டியை வி்ட்டு இறங்கி வைத்திய சாலையினுல் ஓடி வந்தார்கள்.

ஓடிவந்தவர்கள்,  பிள்ளையின் மாமனார் பிள்ளையை மேல் மாடியில் இருந்து வீசியதாக கதறினார்கள். 

இடையில் ஒருவரின் கையில் ஒரு குழந்தை இரத்தம் தோய்ந்த நிலையில் கண்ணால் பார்க்க முடியவில்லை. கதரிய நிலையில் உள்ளே ஓடிவந்தார். பிள்ளையின் தந்தை வைத்தியசாலையில் நிலத்தில் வீழ்ந்த நிலயில் கதறினார். 

வெளி நோயளர் பிரிவில் வரிசையாக, நோயுற்ற சிறு பிள்ளைகளை பார்துக்கொண்டிருந்த வைத்தியார்கள், தங்கள் ஆசனங்களை வி்ட்டு எழுந்து குழந்தை யூசுபை  ஒரு வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு அனைத்து வைத்தியார்களும் அதன் பின்னால் ஓடினார்கள்.

பிள்ளையின் தாய் வைத்தியசாலையில் மயங்கி விழுந்தார். வைத்தியசாலை அல்லோல கல்லோலப் பட்டது.

பெண் தாதிகள் பிள்ளைக்கு ஆபத்து இல்லை என தாயை சமாளிப்பதும் ஆண் தாதிகள் தந்தையை சமாளிப்பதும் பரிதாபம், கண்ணால் பார்க்க முடியவில்லை.

சில நிமிடங்களில் அங்கு வந்த வைத்தியர்கள் பிள்ளை உயிருடன் உள்ளதாகவும்சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கவலைப்பட வேண்டாம் வைத்தியர்கள் தம்மால் முடிந்த வரை முயற்சி செய்கிறார்கள் என்ற செய்தியை தெரிவித்தனர்.
அப்போது அங்கிருந்த மக்கள் சாதி மதம் இனம் நிறம்  பாராது பிராத்தனை செய்தனர். 

இன ரீதியாக மத ரீதியாக அரசியல் வெறியர்களால் பதவிக்காக வேட்டையாடப்பட்ட  நாம், கடந்த காலங்களில் வைத்தியசாலைகளில் கவனிக்கப்பட்ட விதமும், தற்போது மாற்று மத வைத்தியர்களும், தாதியர்களும், அந்த மக்களை கவனித்த விதமும், என் மனம் பழைய நினைவில் ஒரு திரையங்காய் மாறியது . 

அன்பும், ஒற்றுமையும், மனித நேயமும், அடுத்தவர் கவலையில், துன்பத்தில் இனம் மதம் பாராமல் பங்கு கொள்ளும் விதமும் வியப்பாகவே இருந்தது. மாற்று மத சகோதர சகோதரிகளின் அன்பும், ஆதரவும், பாசமும் அனுதாபமும் கரைபுரண்டோடியது.  

அங்கு சிந்தி இருக்கும் இரத்தம் ஒரு மனித இரத்தம்
அதற்கு இனம்  சாதி மதம் இல்லை என்பதை அங்கு குழுமியிருந்த மக்கள் சான்று பகர்ந்தனர்.

இது இலங்கை தானா என்பதும் ஒரு நொடிப் பொழுது சந்தேகமும் என் மனதில்  தோன்றி மறைந்தது. 

சில வருடங்களுக்கு முன் மனிதர்களை  கொலை செய்யும் மனித குலத்தின் எதிரிகளாக பார்கப்பட்ட நாம்,  தற்போது அம்மக்களால் அரவனைக்கப்படும் நிலை, 
நடந்த சம்பவம் கவலையான தாக இருந்தாலும் மாற்றுமத மக்களால் வழங்கப்பட்ட அரவணைப்பும் ஆறுதலும் மனதை குளிர வைத்தது.

இருந்தாலும் மனித நேயத்தில் உயர்ந்த மதத்தில் இருக்கும் நம்மத்தியில், இப்படியான ஒரு கொடூரமான செயல் நம்மவர்களால் நடந்திருப்பதை
நினைத்து கூச்சமாகவும் இருந்தது.

சத்தியம் சாவதுமில்லை, அசத்தியம் வாழ்வதுமில்லை என்பதை என் மனதில் நினைத்துக் கொண்டேன்.

அப்போது வைத்தியர்களும் தாதியர்களும் அந்தத் தாயிடம் விபரங்களை கேட்க ஆரம்பித்தனர்.

அந்தத் தாய் கூறியதாவது.

இன்று வெள்ளிக்கிழமை என்பதால் பள்ளி முடிந்து வரும்போது சாப்பாடு தேவை,  எனவே பிள்ளையை தாலாட்டி கட்டிலில் உறங்க வைத்துவிட்டு சமையலறைக்குச் சென்றேன். அப்போது என் தம்பி பணம் கேட்டு என்னுடன் சண்டை பிடித்துக் கொண்டிருந்தார்.

தான் பணம் தராவிட்டால் பிள்ளையை ஜன்னல் வழியாக வீசப் போவதாகவும் சொன்னார்.ஆனால் அவர் அதை செய்வார் என்ன நான் எதிர்பார்க்கவில்லை. பிள்ளையை வீசும்போது பிள்ளை உறக்கத்திலேயே இருந்துள்ளது.

சற்று நேரத்தில் வெளியில் சனக் கூட்டத்தின் சத்தம் கேட்கவே ஓடிவந்து பார்த்தபோது கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த  பிள்ளையைக் காணவில்லை பிள்ளை வெளியே வீசப்பட்டிருந்தது.

கண் மூடிய நிலையில் உலகத்திற்கு அவதரித்த முகமது யூசுப்,கண் மூடிய நிலையிலேயே உலகத்தை விட்டுப் பிரிந்தான்.

இந்த கவலையான கதையை சொல்லி முடிக்க அந்தத் தாயால்  முடியவில்லை. இடையிடையே மயக்கமுற்றார். முகத்திற்கு தண்ணீர் தெளிப்பதும் தண்ணீர் பருக்குவதுமாக அந்தத் தாய் கதையை சொல்லி முடித்தார்.

இனி நம்மால் நடக்க வேண்டியது என்ன ?

பதவிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கங்களும் போதைப்பொருளை ஒழிப்போம் என மக்களுக்கு வாக்குறுதி அளித்தாலும், போதைப் பொருள் பாவனை தொடர்ந்தும் அதிகரித்தே செல்கின்றது.

போதைப் பொருள் ஒரு உலகளாவிய பரந்த வலையமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது.
இதன் பின்னணியில் இருப்பது  பிரபுக்களும் பிரபலங்களுமேயாகும்.

எமது நாட்டைப் பொறுத்த வரையில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அதனுனல் சில ஆசாமிகள் இருக்கவே செய்கின்றனர். அவர்களது காரியத்தை சாதிப்பதற்காக அதிகாரத்தின் பக்கம் சாய்வதும், அதிகாரங்கள் தங்கள் பதவிகளை தக்கவைத்துக்கொள்ள அவர்களை அரவணைப்பதும் தொடர்சியாக நாம் கண்டு வருகிறோம்.

இறுதியாக போதை பொருளுக்காக மரண தண்டனையை அமுல்படுத்த  வேண்டும் என உறுதிபூண்டு, அதற்காக சட்டங்களை வகுத்த நல்லாட்சி அரசு, இறுதியாக போதைவஸ்து குற்றச் சாட்டில் மரண த‌ண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு ஜனாதிபதி
மன்னிப்பு வழங்க அபூர்வ வரலாறும் இலங்கையில் நிகழ்ந்துள்ளது.

எனவே எமது நாட்டின் அரசியல் கட்டமைப்பையும் அதிகார வலையமைப்பையும், அரசியல்
நிலப்பாட்டையும் ஆரய்ந்து பார்க்கும் போது,   இலங்கையில் அரசாங்க ரீதியிலான போதைப்பொருள் ஒழிப்பு என்பது,  வானில் வரையும் காவியங்களாகவும் , நீரில் வரையும் ஓவியங்களாகவும் கற்பனையில் மட்டுமே காண வேண்டியுள்ளது.

காலத்திற்கு காலம் இவ்விதமான கவலையான சம்பவங்கள் நிகழும்போது இதுபற்றி கதைப்பதும், சட்டங்கள் பற்றிப் பேசுவதும்,
சட்டங்களால் வேலி அமைப்பதும் ,  பின்பு அவர்களே அதை மீறுவதும், சட்டத்தில் சிக்கியவர்களை சட்டம் அமைத்தவர்களே காப்பாற்றுவதும்,
ஒரு வேடிக்கையாகவே மாறியுள்ளது. 

கடந்தவராம் களுத்துமாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் விக்ரமநாயக அவர்கள் பொதைப் பொருள் ஒழிப்பை பள்ளிவாசல்களை மையமாகக் கொண்டு ஒழிக்க நடவடிக்கை எடுப்பது குறித்து கருத்து வெளியிட்டிருந்தார்.

இவரது கருத்து களுத்துறை மாவட்ட முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை இலக்காகக் கொண்டது போன்ற கருத்துக்களும், இன்னும்  பல்வேறுபட்ட வர்களால் பல விதங்களில் நோக்கப்பட்டாலும்,  இதில் ஒரு உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கின்றது.

அதிகாரத்தில் உள்ள ஒருவர்,  இவ்வாறான ஒரு கருத்தை, இந்தப் பிரச்சினையை மக்களிடம் ஒப்படைப்பதில் இருந்து,  தாம் ஒரு அமைச்சராக அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த போதிலும், போதைவஸ்து விடயத்தில்  தனக்கு உள்ள  அதிகார உச்சவரம்பு  குறிப்பிட்ட விடயத்தில் தலையிடும்  அளவுக்கு சக்தி அற்றவை என்பதை அவர் தனது கருத்தில் மறைமுகமாக குறிப்பிடுவதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அத்தோடு அதிகார வரம்பிற்குள் இதை தடுபது எவ்வளவு கஷ்டமானது, அதை செய்ய முடியுமா ? அவ்வாறு அதனை முற்றுப்புள்ளி வைக்க முடியுமா, என்பது பற்றியம் சந்தேகமும் எழுகின்றது.

போதைவஸ்து கொடூரத்தினால் கொடூரமான கொல்லப்பட்டவர்களின் வரிசையில் 
புங்குடு தீவு வித்தியாலய மாணவி வித்யா 18 வயது  மாணவி, 5 வயதை உடைய கொட்டதெனிய சேயா, 
அட்டுளுகமை 9 வயது சிறுமி பாத்திமா ஆயிசா என்று காலத்திற்கு காலம் வரிசை நீண்டுகொண்டே செல்கின்றது. 

இவ்வாறான கொடுமைகள்  நடக்கும் போது அதைப்பற்றி கதைப்பதும் மீண்டும் அதை மறப்பதும் ஒரு சாதாரணமான விடயமாக மாறிவிட்டது.

இச்சம்பவம் நடந்த  பின்பு போதைவஸ்து ஒழிப்புக்கான ஒரு உயர் அதிகாரியுடன் இது பற்றிய 
கருத்துப் பரிமாறலின் போது அவர் கூறிய சில விடயங்கள் திடுக்கிட வைத்தன. 

தான் பாதுகாப்புத்துறையில் உள்ள ஒரு உயர் அதிகா‌ரியாக இருக்கும் நிலையி்ல் அவருக்கு மிரட்டல்கள் வரும் போது இதை தடுக்க முயற்சிக்ககும் ஒரு சாதாரண பொதுமகனின் நிலை என்ன என்பது பற்றி நினைக்கவும் முடியாத நிலையிலையே நிலமை மாறியுள்ளது.

ஆக நாம் நம் சமூகத்தை பாதுக்காக்க என்ன செய்ய வேண்டும் ?

போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமான சில  அதிகாரிகளுடனும் மற்றும் இது பற்றிய தேடுதல்களையும் ஆய்வுகளையும் மேற்கொள்ளும்போது,  இனியும் நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன என்பதை விளங்கிக் கொள்ள முடிந்தது.

அரசாங்க, மற்றும் பாதுகாப்பு ரீதியில்  போதைப் பொருள் ஒழிப்பு என்பது மிகவும் சிரமமான ஒரு விடயமாகவே இலங்கையில் ஊடுருவியுள்ளது.

போதைவஸ்தை பாவிக்கும்
ஒரு சாரார் என ஒதுக்கும் நிலை மாறி, நாம் மூக்கில் விரலைவைக்கும் அளவிற்கு ஆண், பெண் என்ற வித்தியாசமின்றி நினைத்தும் பார்க்க முடியாத நல்ல நிலையில் உள்ள சிலரும், இதற்கு அடிமையாகியுள்ளதை கேள்விப்படும்போது கவலையாக உள்ளது. 

எனவே சட்டரீதியாக போதைப் பொருள் ஒழிப்பை மட்டும் நாம் எதிர்பார்த்திருந்தால் , அக்கினியில் பூக்கும் மலரை பறிக்க காத்து நின்றவரின் நிலையே நம் சமுதாயத்திற்கு ஏற்படும்.அக்கினி அணைந்து அதில் மலரை பறிக்க காத்து நிற்பவருக்கு இறுதியில் கிடைப்பது  அழிந்து போன புழுதிகள் மாத்திரமே. 

எனவே நம் சமூகத்தில் அவரவர் குடும்பங்களை ஒவ்வொருவரும் பாதுகாத்துக் கொள்வதில் உறுதி பூண்டு, அவரவர் கண்ணும் கருத்துமாக இருப்பததே இதற்கான வழிமுறையாகும். 

சமூகத்தில் ஒவ்வொரு தந்தையும் தாயும் ஒவ்வொரு பிள்ளைகளின் நடவடிக்கைகள் சம்பந்தமாகவும், அவர்களின் தொடர்புகள்,அவர்களது நடவடிக்கை வித்தியாசங்கள் என அவதானத்துடன் இருந்தல் வேண்டும்.

ஊர்மக்கள் பள்ளிவாசல்கள்  சமூக சேவை அமைப்புக்கள் இதுசம்பந்தமாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி, இதுசம்பந்தமாக பொதுமக்களும் த‌ங்களது ஒத்துழைப்பினை வழங்கினால் அன்றி 
இன்று புற்று நோயாக ஊடுருவி இருக்கும் இந்த
கொடூரத்திற்கு முகம் கொடுப்பது மிகக்கடினமானது.

இவற்றை எமது சமூகம் காலம் கடந்தாவது சிந்திக்கவில்லையாயின்
எதிர்காலத்தில் எமது சந்ததியில் எதிர்பார்த்ததற்கு  எதுவு‌ம் மீதம் இருக்காது என்பதே உண்மை.

போதையை ஒழிப்போம் ,
ஒத்துழைப்போம், வரும் தலை முறையை பாது காப்போம்.

( பேருவளை ஹில்மி )


 


Post a Comment

Previous Post Next Post