"தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சியை கட்டமைத்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" : ஐ.நா.சபை புகழாரம்!

"தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சியை கட்டமைத்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" : ஐ.நா.சபை புகழாரம்!

தமிழகத்தில் சிறப்பான ஆட்சியைக் கட்டமைத்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என ஐ.நா.சபை பாராட்டியுள்ளது என்று வலைதளங்களில் வலம் வரும் வீடியோ ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் கூறப்படுவதாவது:-

இந்தியாவிலும் உலக அளவிலும் தமிழ்நாடு வலுவான பாதுகாப்பான மாநிலமாக உள்ளது என்றும், அதனைத் திறம்பட நிர்வகிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டுகள் எனவும், நார்வேயைச் சேர்ந்த ஐ.நா.வின் முன்னாள் சார்புச் செயலாளர் எரிக் சோல் ஹெய்ம் பேசிய காணொலி, வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காலநிலை மாற்றத்திற்கான மாநாட்டை மு.க.ஸ்டாலின் சிறப்பாக நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலகட்டத்தில், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் எனவும், மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பான ஆட்சியைக் கட்டமைத்து வருகிறார் எனவும் அரசியல் பிரமுகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

எவரும் எட்டாத சாதனைகளை மு.க.ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார் என அனைத்துக் கட்சித் தலைவர்கள் பாராட்டிப் பேசி வருகின்றனர். 'எல்லா சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஏராளமான திட்டங்களை வழங்கியுள்ளார்' எனவும், இது அவரது பரந்த நோக்கைக் காட்டுகிறது எனவும் பா.ம.க கட்சியின் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

ஒரு விடியல் ஆட்சி தற்போது நடந்து கொண்டிருக்கிறது' என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இராமச்சந்திரன் பாராட்டிப் பேசியுள்ளார். இவ்வாறு முதலமைச்சராக பொறுப்பேற்ற ஒன்றரை வருடங்களில் பல விஷயங்களைச் சாதித்து பெருமை ஸ்டாலினையே சாரும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு அந்தக் காணொலியில் கூறப்பட்டுள்ளது.
kalaignarseithigal


 


Post a Comment

Previous Post Next Post