இலங்கையில் தற்போது காணப்படும் மூடுபனி இயற்கையான நிகழ்வு அல்ல,

இலங்கையில் தற்போது காணப்படும் மூடுபனி இயற்கையான நிகழ்வு அல்ல,

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக காற்று மாசுபாட்டை கண்காணிக்கும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்தது.

இலங்கையில் தற்போது  காணப்படும் மூடுபனி  இயற்கையான நிகழ்வு அல்ல, ஏனெனில் இலங்கையின் வடக்குப் பகுதியில் காற்றின் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.

 இந்தியாவிலிருந்து வீசும் அசுத்தமான காற்று காரணமாக இப்பகுதி காற்று தரக் குறியீட்டில் (AQI) 200க்கு மேல் பதிவு செய்து வருகிறது.

பொதுமக்கள் தங்கள் உடல் நலத்தை பாதுகாக்க முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

AQI சுட்டெண் யாழ்ப்பாணத்தில் 212 ஆகவும், கம்பஹாவில் 189 ஆகவும், தம்புள்ளையில் 170 ஆகவும், கொழும்பில் 169 ஆகவும், கண்டி 161 ஆகவும், நீர்கொழும்பில் 170 ஆகவும், அம்பலாந்தோட்டையில் 157 ஆகவும் இருந்தது.

பலத்த காற்றின் ஊடாக இந்தியாவில் இருந்து இலங்கையின் வான்வெளிக்கு தூசித் துகள்கள் வருவதால் நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO)பொதுமக்களை எச்சரித்துள்ளது.

பத்தரமுல்லை மற்றும் கொழும்பு உட்பட பல பகுதிகளில் காற்றின் தரச்சுட்டெண் 114 ஆகவும், மன்னாரில் காற்றின் தரச்சுட்டெண் 117 ஆகவும் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் 212 ஆகவும், கம்பகாவில் 189 ஆகவும், தம்புள்ளையில் 170 ஆகவும், கொழும்பில் 169 ஆகவும், கண்டியில் 161 ஆகவும், நீர்கொழும்பில் 170 ஆகவும், அம்பலாந்தோட்டையில் 157 ஆகவும் காற்றின் தரச்சுட்டெண் பதிவாகியுள்ளது. 



 


Post a Comment

Previous Post Next Post