FIFA 2022;மதிப்புமிக்க தங்கப் பந்து விருதினை யார் தட்டிச்செல்வார்கள்.....

FIFA 2022;மதிப்புமிக்க தங்கப் பந்து விருதினை யார் தட்டிச்செல்வார்கள்.....

கத்தார் உலகக் கோப்பை போட்டிகள் இரண்டாவது சுற்று முடிவடைந்துள்ள நிலையில் 8 அணிகள் காலிறுதியில் போட்டியிட உள்ளன.

இதில் நான்கு அணிகள் 14 மற்றும் 15ம் திகதிகளில் அரையிறுதியில் மோத இருக்கிறது.

அத்துடன் மதிப்புமிக்க தங்கப் பந்து விருதினை யார் தட்டிச்செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

1982ல் முதன்முறையாக இந்த விருது அறிவிக்கப்பட்ட பின்னர் இதுவரை 10 வீரர்கள் தங்கப் பந்தை வென்றுள்ளனர். கடைசியாக 2018ல் குரோஷியாவின் லூகா மோட்ரிச் தகுதி பெற்றார்.

இந்த 10 வெற்றியாளர்களில் மூவர் மட்டுமே அந்த முறை உலகக் கோப்பையை வென்ற அணியினை சேர்ந்தவர்கள். 10ல் 8 பேர்கள் இறுதிப் போட்டியில் விளையாடிய வீரர்கள் ஆவார்கள்.

இந்த முறை தங்கப்பந்து போட்டியில், பிரான்ஸ் அணியின் KYLIAN MBAPPE முதலிடத்தில் உள்ளார். 11 ஆட்டங்களில் 9 கோல்களை பதிவு செய்துள்ளார்.

இரண்டாவது முறையாக தங்கப் பந்தை தட்டிச்செல்லும் முனைப்பில் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி உள்ளார்.

இன்னொருவர் போர்த்துகல் அணியின் புருனோ பெர்னாண்டஸ். இதுவரை 7 கொல்களை பதிவு செய்துள்ளார்.

அதேவேளை, இங்கிலாந்து அணியின் ஜூட் பெல்லிங்ஹாம், பிரேசில் அணியின் காசெமிரோ, நெதர்லாந்து அணியின் கோடி காக்போ, மொராக்கோ அணியின் அக்ரஃப் ஹக்கீம், குரோஷியா அணியின் ஜோஸ்கோ க்வார்டியோல் ஆகியோர் களத்தில் உள்ளனர்.



 


Post a Comment

Previous Post Next Post