உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - அர்ஜெண்டினா அணிகள் நேற்றிரவு கத்தாரின் லுசைல் ஐகானிக் மைதானத்தில் மோதின. இந்த ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து அர்ஜென்டினா அணி அதிரடி ஆட்டம் ஆடியது.
அதன்பலமாக 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்த, அதனை அடுத்து 36-வது நிமிடத்தில் டி மரியா கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்த நிலையில், இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.
முதல் 70 நிமிடம் ஆடுவது பிரான்ஸ் அணிதானா என்ற கேள்வி எழும் வகையில் அந்த அணி மிகமோசமாக ஆடியது. அர்ஜென்டினாவில் அதிரடிக்கு முன்னர் பிரான்ஸ் அணியால் நிற்கவே முடியவில்லை. ஆனால், அதன்பின்னர் இறுதி சில நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோள்களை அடித்து பிரான்ஸ் அணி அதிர்ச்சியளித்தது.
90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் 2-2 கோல் கணக்கில் சம நிலையில் இருந்ததை அடுத்து, போட்டி கூடுதல் நேர ஆட்டத்திற்கு சென்றது. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், போட்டி பெனால்டி கிக் முறைக்கு சென்றது. இதில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் உலகமே எதிர்பார்த்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றது.
மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றதில் உலகத்தில் உள்ள மூளை முடுக்கில் உள்ள ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் மெஸ்ஸிக்கு என்று பார்த்தால் கேரளாவில் தான் அதிக ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் கேரளாவில் உலகக்கோப்பை தொடங்கிய நாளில் இருந்தே பல்வேறு வேடிக்கைகள் அரங்கேறி வருகிறது.
அதன்படி கேரளாவை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் தனது குழந்தைகளை கூட்டிக்கொண்டு கத்தார் வரை காரிலே இந்த போட்டியை காண நேரில் சென்றார். மேலும் கேரளாவிலுள்ள சில ரசிகர்கள் மெஸ்ஸிக்காக அர்ஜென்டினா கொடியேந்தி ஒரு பெரிய மைதானத்தில் பெரிய ஸ்க்ரீனில் கால்பந்து போட்டியை தொடர்ந்து கண்டு களித்து வந்தனர்.
இதுபோல் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்த கேரள ரசிகர்கள், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மெஸ்ஸி வெற்றி பெற்றதை கொண்டாட பல்வேறு செயல்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் அவர்கள், மெஸ்ஸியின் உருவப்படத்தை வைத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். வெடிவெடித்து கொண்டாடி வருகின்றனர்.
மேலும் கடைகள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்களில் உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்பட்டன.
அதோடு திருச்சூரில் ஓட்டல் நடத்தி வரும் ஷிபு என்பவர் அர்ஜென்டினா அணியின் தீவிர ரசிகர் ஆவார். அவர் உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றால் 1,000 பேருக்கு இலவசமாக பிரியாணி வழங்குவதாக அறிவித்தார். இந்த நிலையில் நேற்று அர்ஜென்டினா வென்றதையடுத்து இன்று 1,000 பேருக்கு இலவசமாக பிரியாணி வழங்கியுள்ளார்.
இப்படி கொண்டாட்டங்களுக்கு நடுவே சோகமான நிகழ்வும் ஏற்பட்டுள்ளது. இதே கேரளாவிலுள்ள கொல்லத்தில் மெஸ்ஸி அணி வெற்றி பெற்றதால் ரசிகர்கள் ஊர்வலமாக கத்தி கூச்சலிட்டு சென்றனர்.
அப்போது அந்த கூட்டத்தில் பங்கேற்ற அப்பகுதியைச் சேர்ந்த அக்ஷய் (16) என்ற பள்ளி சிறுவன் ஒருவன் கோஷமிட்டு கொண்டிருக்கும்போதே திடீரென சுருண்டு மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
kalaignarseithigal
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments